பெண்களுக்கு ரூ.4 லட்சம் மானியம் யாருக்கெல்லாம் கிடைக்கும்?
பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் (PMMSY) கீழ் புதிய மீன்வளர்ப்பு குளங்கள் அமைத்து உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டத்தில் 01 ஹெக்டேர் பரப்பிற்கு ஆகும் மொத்த செலவினத் தொகை ரூ.11,00,000/-ல் பொது பிரிவினருக்கு 40% மானியம் ரூ.4,40,000/- மற்றும் பெண்கள் / ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 60% மானியம் ரூ.6,60,000/- வரை வழங்கிட ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு பொது பிரிவில் 02 ஹெக்டேர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் (PMMSY) கீழ் உயிர் கூழ்ம திரள் (பயோபிளாக்) குளங்களில் உவர்நீர் இறால் வளர்த்தல் மற்றும் உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டத்தில் 01 அலகு அமைப்பதற்கான மொத்த செலவினம் ரூ.18.00 இலட்சத்தில் பொது பிரிவினருக்கு 40% மானியம் ரூ.7,20,000/- மற்றும் ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 60% மானியம் ரூ10,80,000/- வரை வழங்கிட ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு ஆதிதிராவிடர் பிரிவில் 01 எண்ணம் மற்றும் பொது பிரிவில் 02 எண்ணம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை உறுப்பினர்களுக்கு மீன்விரலிகள் வழங்கும் திட்டத்தில் ஒரு ஹெக்டேர் பரப்பிலான குளத்தில் 10000 எண்ணம் மீன்விரலிகள் இருப்பு செய்திட ரூ.5,000/- பின்னிலை மானியமாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு 60 ஹெக்டேர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எங்கு விண்ணப்பிக்கலாம்?
மேற்படி திட்டங்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் தகுதி மற்றும் மூப்பு நிலையின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து தேர்வு செய்யப்படும். எனவே இத்திட்டங்களில் விண்ணப்பிக்க விரும்பும் மீன் / இறால் வளர்ப்பு விவசாயிகள் நாகப்பட்டினம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் நாகப்பட்டினம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பம் பெற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தென்காசி அறிவிப்பு
இதேபோல், தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையின் கீழ் 2025.26 ஆம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்ட முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் வேளாண்மை/தோட்டக்கலை/வேளாண் வணிகம் / வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் பட்டயபடிப்பு முடித்த நபர்கள் மானியத்தில் அமைத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் தென்காசி மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையின் கீழ் 300 சதுர அடியில் தொழில் தொடங்கவுள்ள 5 நபருக்கு முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் ரூ.10 இலட்சம் மதிப்பில் அமைத்திட 30 சதவீத மானியமாக ரூ.3 இலட்சம் வரை கடன் வழங்கப்படும். 600 சதுர அடியில் தொழில் தொடங்கவுள்ள 3 நபருக்கு முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் ரூ.20 இலட்சம் மதிப்பில் அமைத்திட 30 சதவீத மானியமாக ரூ.6 இலட்சம் வரை கடன் வழங்கப்படும். வங்கி நடைமுறைகளை பின்பற்றி கடன் ஒப்புதல் பெற்ற பின்பு GSTஎண்னுடன் இத்திட்டத்தில் மானிய உதவி பெற https://www.tnagrisnet.tn.gov.in/KaviaDP/register இணையதளத்தில் உரிய ஆவணங்களை சமர்பித்து விண்ணபிக்கலாம்.
மேலும் தகவல்களுக்கு தென்காசி மாவட்டத்தில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி பயன் பெறலாம். மேலும் தொடர்புக்கு தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகத்தின் 04633 290718 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார்.