×

அடுத்த தலைமை செயலாளர் யார்? பரிந்துரை பட்டியலில் மூத்த அதிகாரிகள் 

 

கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்று அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றார். ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து மூன்றாம் ஆண்டு ஆண்டில் திக அரசு காலடி எடுத்துவைத்துள்ளது.  திமுக ஆட்சிக்காலத்தில் கொரோனா நெருக்கடி , கனமழை , வெள்ளம் என அசாதரணமான சூழலை ஸ்டாலின் அரசு கையாண்டது . இதற்கு முதல்வர் மட்டுமின்றி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் காரணம்.   தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் திறம்பட பணியாற்றினார். அவருக்கு  தலைமை செயலாளர் பதவி வழங்கப்பட்டது பலரையும் பலர் தரப்பையும் கவர்ந்தது.

நாகை , காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் துணை ஆட்சியராக இருந்த இவர் செய்தி  துறை , சுற்றுலாத்துறை என பல துறைகளில் பணியாற்றியுள்ளார்.  உளவியல், வர்த்தக நிர்வாகம் ,ஆங்கில இலக்கியம், மேலாண்மை என பலவற்றைப் படித்து தேர்வு எழுதி முனைவர் பட்டங்களை குவித்துள்ள இறையன்பு ஐஏஎஸ் க்கு பொதுவாக சமூகத்தில் நல்ல பெயர் உள்ளது. 

இந்நிலையில் தலைமைச் செயலாளர்  இறையன்பு ஜூன் 30-ம் தேதி ஓய்வு பெறும் நிலையில் மூத்த காவல் அதிகாரிகள் ஏ.கே. விஸ்வநாதன் , ஆகாஷ் குமார், சீமா அகர்வால் பெயர்கள் அடுத்த தலைமை செயலாளர்கள் பட்டியலில் பரிசீலனையில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.