மது பாட்டிலுடன் ஆட்டம் போடும் தவெக எம்.எல்.ஏ... வீடியோவை வெளியிட்டவர் யார் தெரியுமா?
தஞ்சை தவெக சட்டமன்ற உறுப்பினர் ஆர். விஜய் சரவணன் கையில் மது பாட்டிலுடன் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இது 10 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு தனிப்பட்ட நிகழ்வு என விளக்கம் அளித்துள்ளார்.
தவெக கட்சிக்கு ஆதரவாக தமிழக பெண்களும் சோசியல் மீடியாவும் தான் தவெக வாக்கு சதவீதத்தை அதிகமாகியது. இதை அறிந்த தஞ்சாவூர் முன்னாள் மேயர் சண் இராமநாதன், தஞ்சை தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த விஜய் சரவணன் என்பவர், கையில் மதுபாட்டிலுடன் ஆட்டம் போடும் ( பழைய ) வீடியோ சமூக வலைதளங்களில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளார். தனது அரசியல் காழ்ப்புணர்ச்சியாலும் தவெக கட்சிக்கு அவ பெயரை ஏற்படுத்தும் விதமாகவும் குறிப்பாக தஞ்சாவூரில் உள்ள விஜய் ரசிகர்களை கேவலப்படுத்தும் விதமாக முன்னாள் தஞ்சாவூர் மேயர் சண் இராமநாதன் பழைய வீடியோவை வெளியிட்டு குளறுபடிகளை ஏற்படுத்தி வருகிறார்