ஒட்டு கேட்கும் கருவி- யார் மீது சந்தேகம்? ராமதாஸ் பதில்
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் இல்லத்தில் ஒட்டுக்கேட்பு கருவிகள் பொருத்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. நாற்காலியில் அதிநவீன ஒட்டு கேட்பு கருவி கண்டுபிடிப்பு எதிரொலியால் புதிய சோபாவில் அமர்ந்தார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
இதுதொடர்பாக இன்று தனது இல்லத்தில் செய்தியாளார்களிடம் பேசிய ராமதாஸ், “என் வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி வைக்கப்பட்டிருந்தது. தைலாபுரத்தில் எனது வீட்டில் என் நாற்காலி அருகில் லண்டனில் இருந்து வாங்கப்பட்ட அதிநவீன ஒட்டு கேட்கும் கருவி. தனியார் துப்பறியும் ஏஜென்சி மூலம் ஆய்வு நடத்திய பின் கண்டுபிடிக்கப்பட்டது. சைபர் கிரைமில் முறையாக புகார் தெரிவிக்கப்படும். இதுதொடர்பாக தைலாபுரம் இல்லத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆய்வு அறிக்கை வந்தவுடன் சட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும். ஒட்டு கேட்கும் கருவி விவகாரத்தில் ஒரு சிலர் மீது “சந்தேகம்?... இருக்கு...ஆனா இல்ல“ என்றார்.