"தேர்தல் முடிந்தால் 'எடப்பாடி யார்?' என்ற நிலை வரும்": பவானிசாகரில் கே.ஏ.செங்கோட்டையன் அதிரடிப் பேச்சு!
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் தனி தொகுதியில் போட்டியிடும் தமிழ்செல்வியை ஆதரித்து, இன்று சத்தியமங்கலத்தில் தமிழக வெற்றி கழகத்தின் அமைப்புச் செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன் பரப்புரை மேற்கொண்டார்.
செய்தியாளர்களை சந்தித்தபோது, "பவானிசாகர் தொகுதியில் ஆற்றங்கரை ஓரத்தில் ஏராளமான சாய மற்றும் காகித ஆலைகள் செயல்பட்டு வருகின்றது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு 18 சதவீதம் பொதுமக்களுக்கு புற்றுநோய் வருகின்றது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றது. குடிநீரை மாசுபடுத்துகின்ற ஆலைகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என குற்றம் சாட்டினார்.
"இருக்கின்ற ஆலைகளில், எடப்பாடி பழனிச்சாமியின் உறவினருக்கு சொந்தமான மிகப்பெரிய காகித ஆலை ஒன்று உள்ளது. அந்த ஆலையிலிருந்தும் கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. இதற்கு என்ன சொல்கிறீர்கள் என செய்தியாளர்கள் கேட்டதற்கு ... "எடப்பாடி... யார் ? என்ற நிலைமைக்கு அவர் தள்ளப்படுவார். தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என செங்கோட்டையன் தெரிவித்தார்.