×

விஜய்க்கு விசில் போடு..! விசில் சின்னம் கோரி தவெக தேர்தல் கமிஷனில் மனு..! 

 

தமிழக சட்டப்​பேரவை தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே இருப்​ப​தால், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகி​றார். கரூர் சம்பவத்​துக்கு பிறகு அதிமுக - பாஜக கூட்ட​ணியில் விஜய் இணைய வாய்ப்​புள்ளதாக அரசியல் விமர்​சகர்கள் பலர் தெரிவித்து வந்த நிலையில், தவெகவின் பொதுக்குழு தீர்மானம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்​தி​யுள்ளது.

இதற்கிடை​யில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்​பேரவை தேர்தலில் போட்டி​யிட​வுள்ள தவெக கட்சிக்கு சின்னம் ஒதுக்​கக்​கோரி, அக்கட்​சியின் நிர்வாகிகள் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் நேற்று மனு அளித்​தனர். 

தவெக இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், 1968ம் ஆண்டு தேர்தல் சின்னங்கள் ஆணைப்படி, புதுடில்லியில் உள்ள தேர்தல் கமிஷனிடம், விசில், ஆட்டோரிக்ஷா மற்றும் மைக்ரோபோன் உள்ளிட்ட 10 சின்னங்களின் பட்டியலுடன் ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பித்தார்.விருப்பத்தேர்வு சின்னங்களின் பட்டியலில் முதலிடத்தில் விசில் சின்னம் உள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு விஜய் நடிப்பில் தமிழ் படம் 'பிகில்' வெளியாகி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று இருந்தது. அதேநேரத்தில், இந்த படம் தெலுங்கில் விசில் என்ற பெயரில் வெளியாகி இருந்தது.
 

அதேபோல், கடந்த 2024ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான தி கோட் படத்தில், 'சத்தம் பத்தாது விசில்போடு' என்ற பாடல் இடம்பெற்று இருந்தது. விசில் சின்னத்தை மக்கள் மத்தியில் எளிதில் கொண்டு செல்ல முடியும் என தவெக தலைவர் விஜய் கருதுகிறார். இதுவே விஜயின் தவெக விசில் சின்னம் கோரி இருப்பதற்கு பின்னணியாக கருதப்படுகிறது.

“வேட்​டைக்​காரன் படத்தில் விஜய் ஆட்டோ ஓட்டு​வார். பைரவா படத்தில் விஜய் கிரிக்கெட் விளையாடு​வார். பிகில் படத்தில் விஜய் கபடி பயிற்​சி​யாளராக விசிலுடன் இருப்​பார். அதேபோல் பிகில் படத்தில் ‘கப் முக்கியம்’ என்று விஜய் சொல்வார். அதனால், வெற்றிக்​கோப்பை சின்னமும் கேட்டுள்​ளோம். இந்த நான்கு சின்னமும் விஜய்க்கு மிகவும் பிடித்த சின்னமாக உள்ளது. இதில், ஏதாவது ஒரு சின்னம் தேர்தல் ஆணையம் ஒதுக்​கி​னால், சின்னத்தை எளிதாக மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும்