பாக்கெட்டில் இருந்த பணம் எங்கே? – வங்கியின் நடுவே கதறிய நபர்... கேமராவை பார்த்ததும் உறைந்துபோன காவல்துறை!
பஞ்சாப் மாநிலம் பட்டிந்தா மாவட்டம் ராம்புரா பூல் (Rampura Phul) பகுதியில் உள்ள ஒரு வங்கியில் நடைபெற்ற அதிர்ச்சியூட்டும் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கியில் பணம் செலுத்த வந்த பங்கஜ் கோயல் (Pankaj Goyal) என்பவரது பாக்கெட்டில் இருந்து, ஒரு சிறுவன் லாவகமாக 50,000 ரூபாயைத் திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளான்.
பணத்தை இழந்த பங்கஜ் கோயல் வங்கிக்கு அருகில் பணம் செலுத்த நின்றிருந்த வேளையில், அருகில் நின்ற சிறுவன் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி இந்தத் திருட்டை அரங்கேற்றியுள்ளான். எனினும், இந்தச் சம்பவம் குறித்த முழுமையான காட்சிகள் வங்கியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியுள்ளது.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்தச் சிறுவன் எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி மிகவும் சாதுரியமாகத் திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு தப்பியோடிய சிறுவனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பொதுமக்கள் அதிகம் புழங்கும் வங்கி வளாகத்திற்குள்ளேயே நடந்தேறியுள்ள இந்தத் திருட்டுச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
पंजाब के बठिंडा जिले के रामपुरा फूल स्थित PNB बैंक में पैसे जमा कराने आए शख्स की जेब से एक नाबालिग ने ₹50,000 पार कर दिए! 😳 नन्हे उस्ताद की यह करतूत बैंक के CCTV कैमरे में कैद हो गई। छोटे पैकेट वाले पटाके धमाका जोर से करते हैं संभाल कर रहिए। https://t.co/Bdx4yZY9Wk
— Akhilesh Hindustani (@byakhileshyadav) November 6, 2026