“எங்க பிள்ளை போச்சே...சேஃப்டிக்கு எதுவும் கொடுக்கல..!” - ‘கில்லர்’ படப்பிடிப்பு விபத்தில் பலியான மதன் குடும்பத்தினர் கண்ணீர் பேட்டி!
நடிகர் எஸ்.ஜே.சூர்யா தற்போது இவர் குணச்சித்திர வேடங்களிலும், கதாநாயகனாகவும் நடித்து வருகிறார் இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு ’கில்லர்’ (Killer) என்ற திரைப்படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.
இதனிடையே ’கில்லர்’ படத்தின் படப்பிடிப்பு, சென்னை பெரம்பூரில் உள்ள பின்னி மில் வளாகத்தில் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், படத்தின் முக்கிய காட்சிகளில் ஒன்றான வெடி குண்டு வெடிக்கும் காட்சியை குழுவினர் படமாக்கி கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 5 மணி அளவில் யாரும் எதிர்பாராத நிலையில், சிலிண்டர் ஒன்று பயங்கர சப்தத்துடன் வெடித்து சிதறியது.
இதில் படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றி வந்த மதன் என்பவர் பலத்த காயமடைந்தார். அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மதன் சண்டைக் கலைஞராக பணியாற்றி வந்தார் என கூறப்படுகிறது. மேலும் காயமடைந்த இருவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் எஸ்.ஜே.சூர்யா படப்பிடிப்பில் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளாகி உயிரழந்த மதன் குடும்பத்தினர் கண்ணீர் மல்க பேட்டி
வேலைக்கு போறேன் தான் சொன்னான். நைட் போன் பண்ணியும் எடுக்கல. காலையில ஒரு 6 மணிக்கு கூட வேலைக்கு போனவங்க தான் சொன்னாங்க.. ஓனர் யாரும் சொல்லலே.. safety க்கு எதுவும் கொடுக்கல.. எங்க பிள்ளை போச்சே.. சின்ன வயசுலயே அவங்க அப்பா இறந்துட்டாங்க.. எங்க வீட்டிலே தான் இருப்பான்.. என பேசியது பார்ப்போரை கண்கலங்க வைத்தது