☰
×

மகளிருக்கு ரூ.2,500 வழங்கும் திட்டம் எப்போது? - அமைச்சர் தகவல்..!

 

மகளிருக்கு ரூ.2,500 வழங்கும் திட்டம் எப்போது தொடங்கப்படும் என்பது குறித்து அமைச்சர் ஜெகதீஸ்வரி தகவல் தெரிவித்துள்ளார். விருதுநகரில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,

ரூ.2,500 வழங்கும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது உள்ள மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் (ரூ.1,000) பல்வேறு குளறுபடிகள் உள்ளன. அவற்றை சரிசெய்து, கடைக்கோடி மக்களுக்கும் ரூ.2,500 வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். முதலமைச்சர் இது குறித்து அறிவிப்பார் என்று தெரிவித்தார்.