×

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது பயன்பாட்டுக்கு வரும்?- வெளியான புது தகவல்

 

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் ஜனவரி மாதத்தில் பயணிகளின் பயன்பாட்டிற்கு வரும் தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்தில் ஒருங்கிணைந்த கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இன்னமும் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை.. சென்னை மக்களின் முக்கியமான தேவையான கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது செயல்பாட்டிற்கு வரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், வரும் ஜனவரி மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

சென்னையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டபட்ட போதே, அதன் எதிரில் உள்ள தண்டவாளத்தில் ரயில் நிலையத்தை அமைத்திருக்கலாம். இதற்கு தெற்கு ரயில்வே சரியான முடிவினை உடனே எடுக்கவில்லை. இதனால் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் இன்று வரை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதுஒருபுறம் எனில், கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை திறப்பதில் முக்கியப் பிரச்சனை ஒன்று இருக்கிறது. பேருந்து நிலையத்தையும், ரயில் நிலையத்தையும் இணைக்கும் ஆகாய நடைபாதையின் கட்டுமானப் பணிகள் தாமதமாவதுதான் அந்த பிரச்சனையாகும்.

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அருகில இடத்தை கையகப்படுத்துவதில் சிக்கல் நீடித்து வருகிறது. அதேபோல் இழப்பீடு தொடர்பான பிரச்சனைகள் நீடித்து வருகின்றன. மேலும் ரயில்வே எல்லைக்குள் ஆகாய நடைபாதை கடந்து செல்வதால் அந்த பணிகளும் சிக்கல் ஏற்பட்டது ரயில் நிலையத்தின் பெரும்பாலான கட்டுமானப் பணிகள் ரயில்வே தற்போது முடித்துவிட்ட போதிலும், பேருந்து நிலையத்திற்குச் செல்லும் பயணிகளின் பாதுகாப்புக் கருதி, ஆகாய நடைபாதை கட்டி முடிக்கப்பட்ட பின்னரே ரயில் நிலையத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறக்க முடியும் என்ற நிலை இருக்கிறது. இந்நிலையில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து தெற்கு ரயில்வே ஜனவரி மாதத்தில் திறக்கப்படும் என விளக்கம் அளித்துள்ளது. கிளாம்பாக்கம் ரயிலி நிலையத்தையும்,  பேருந்து நிலையத்தையும் இனைக்கும் ஆகாய நடைபாதை கட்டி முடிக்கப்படாததால் ஊரப்பாக்கம் அல்லது வண்டலூர் ரயில் நிலையத்தை பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர் ஜனவரி மாதம் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறக்கப்பட்டால் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.