×

சசிகலா தமிழகம் வருவது எப்போது? ஜெய் ஆனந்த் தகவல்!

சசிகலா சிகிச்சை முடிவடைந்து பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழகம் திரும்புவார் என்று ஜெய் ஆனந்த் தெரிவித்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்த சசிகலா விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா தற்போது சிறை தண்டனை முடிந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதனிடையே சசிகலாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அவருக்கு பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
 

சசிகலா சிகிச்சை முடிவடைந்து பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழகம் திரும்புவார் என்று ஜெய் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்த சசிகலா விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா தற்போது சிறை தண்டனை முடிந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதனிடையே சசிகலாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அவருக்கு பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனால் இன்று மருத்துவமனைக்கு சென்ற சிறைத்துறை அதிகாரிகள் விடுதலைக்கான ஆவணங்களில் கையெழுத்து பெற்றனர். பின்பு அவரை விடுதலை செய்ததற்கான ஆவணங்களை சசிகலாவிடம் ஒப்படைத்தனர். அப்போது அவருடன் டிடிவி தினகரன், வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்நிலையில் சிறையிலிருந்து விடுதலையான சசிகலா சிகிச்சை முடிவடைந்து பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழகம் திரும்புவார் என்று அவரது அண்ணன் மகன் ஜெய் ஆனந்த் தெரிவித்துள்ளார். தொடர்ந்து விக்டோரியா அரசு மருத்துவமனையில் சசிகலா சிகிச்சை பெறுவார் என்றும் சசிகலாவின் கொரோனா சிகிச்சை ஜனவரி 31 ஆம் தேதியுடன் நிறைவு பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.