×

தட்டச்சு, கணினி பயிற்சி மையங்கள் திறக்க அனுமதி எப்போது?

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்ட நிலையில், பொது போக்குவரத்து எவற்றுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அதே போல மக்கள் அதிகமாக கூடும் இடங்களான மால்கள், தியேட்டர்கள், கோவில்கள் உள்ளிட்ட இடங்களுக்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை. பள்ளிகளை திறக்க கூடாது என்ற சூழல் நிலவுவதால் ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதே போல ஜிம்கள் இயங்கவும் அனுமதி வழங்கப்படாமல் இருந்து வந்த நிலையில், நேற்று கட்டுப்பாடுகளுடன் ஜிம்கள் இயங்க முதல்வர் அனுமதி அளித்தார். ஆனால் இதுவரை
 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்ட நிலையில், பொது போக்குவரத்து எவற்றுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அதே போல மக்கள் அதிகமாக கூடும் இடங்களான மால்கள், தியேட்டர்கள், கோவில்கள் உள்ளிட்ட இடங்களுக்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை. பள்ளிகளை திறக்க கூடாது என்ற சூழல் நிலவுவதால் ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதே போல ஜிம்கள் இயங்கவும் அனுமதி வழங்கப்படாமல் இருந்து வந்த நிலையில், நேற்று கட்டுப்பாடுகளுடன் ஜிம்கள் இயங்க முதல்வர் அனுமதி அளித்தார். ஆனால் இதுவரை தட்டச்சு பயிற்சி மையங்களுக்கோ கணினி பயிற்சி மையங்களுக்கோ அனுமதி வழங்கப்படவில்லை.

இது தொடர்பாக உயர்நீதிமன்ற கிளையில் பயிற்சி பள்ளிகள் சங்கம் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தட்டச்சு, கணினி பயிற்சி மையங்களை திறப்பது தொடர்பாக தலைமை செயலரும் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளரும் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் தொழில்நுட்ப கல்வித்துறை இயக்குனரும் 17 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.