கோவைக்கு எப்போது வருகிறார் விஜய்? புதிய அரசியல் பிரசார சுற்றுப்பயண விவரம்..!
தவெக தலைவர் விஜய் தனது மக்கள் சந்திப்பு பயணத்தை கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி திருச்சியில் தொடங்கினார், ஆரம்பத்தில் 3 மாவட்டங்கள் விதம் சந்திக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் தற்போது தனது பயணத்தில் சிறு மாற்றம் செய்து 2 மாவட்டங்களுக்கு செல்ல விஜய் முடிவு செய்தார். அதன் படி செப்டம்பர் 20 ஆம் தேதி அன்று நாகை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு விஜய் தனது மக்கள் சந்திப்பை முடித்தார். தற்போது 2 மாவட்டங்களுக்கு மட்டுமே செல்வதால் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணத்தை முடிக்க தாமதம் ஆகும் என்பதாலும் வேறு சில காரணங்களாலும் தனது பயண திட்டத்தை விஜய் நீட்டித்துள்ளார்.
ஆரம்பத்தில் டிசம்பர் 20 வரை மட்டுமே தனது பயணத்தை திட்டமிட்டிருந்த விஜய் அந்த பயணத்தை பிப்ரவரி 21 ஆம் வரை நீட்டித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி விஜயின் புதிய அரசியல் பிரசார சுற்றுப்பயண விவரம்:-
- 27/09/2025- நாமக்கல், கரூர்
- 05/10/2025- வேலூர், ராணிப்பேட்டை.
- 11/10/2025- பாண்டிச்சேரி, கடலூர்
- 18/10/2025- தூத்துக்குடி, திருநெல்வேலி
- 25/10/2025- திருப்பூர், ஈரோடு
- 01/11/2025- பெரம்பலூர், கள்ளக்குறிச்சி
- 08/11/2025- கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்
- 15/11/2025- விழுப்புரம், திருவண்ணாமலை
- 22/11/2025- சேலம், தருமபுரி
- 29/11/2025- தஞ்சை, மயிலாடுதுறை
- 07/12/2025- புதுக்கோட்டை, திண்டுக்கல்
- 13/12/2025- சிவகங்கை, ராமநாதபுரம்
- 20/12/2025- திருவள்ளூர், காஞ்சிபுரம்
- 24/01/2026- மதுரை, தேனி
- 31/01/2026- கன்னியாகுமரி
- 07/02/2026- தென்காசி, விருதுநகர்
- 14/02/2026- கோவை, நீலகிரி
- 21/02/2026- செங்கல்பட்டு, சென்னை.