×

ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? - பெண்களின் கேள்விக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி பதில்..!

 

ராஜபாளையத்தில் நடந்த கல்வி உபகரணங்கள் வழங்கும் விழாவில் பேசிய சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசியதாவது: 

தமிழக வெற்றிக் கழக தேர்தல் வாக்குறுதியில் கூறிய, 2,500 ரூபாய் உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும் என பெண்கள் கேள்வி எழுப்பினர். 1,000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள், வழிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. 

நீண்ட நடைமுறை என்பதால், அவகாசம் கேட்கிறோம். கண்டிப்பாக 2,500 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும். 

இவ்வாறு அவர் பேசினார்.