வாட்ஸ் அப்-பின் அடுத்த அப்டேட்! வாட்ஸ்அப்பில் அறிமுகமாகும் புதிய 'கிரீன் டாட்' வசதி..!
வாட்ஸ்அப் தற்போது புதிய 'கிரீன் டாட்' அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்சமயம் சோதனை கட்டத்தில் இருக்கும் இந்த வசதி, விரைவில் அனைத்து பயனர்களின் பயன்பாட்டிற்கும் அதிகாரப்பூர்வமாக வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அப்டேட் மூலம் பயனர்கள் யார் யாரெல்லாம் ஆன்லைனில் இருக்கிறார்கள் என்பதை மிக எளிதாக அறிந்து கொள்ள முடியும்.
தற்போது, ஒருவர் ஆன்லைனில் இருக்கிறாரா என்பதைத் தெரிந்துகொள்ள, அவரது சாட் (Chat) பக்கத்திற்குச் சென்று 'Online' என்ற வாசகத்தைப் பார்க்க வேண்டியிருந்தது. இனி, வாட்ஸ்அப்பின் 'ஸ்டேட்டஸ்' (Status) பக்கம் அல்லது சாட் லிஸ்டிலேயே (Chat List), ஆன்லைனில் இருக்கும் பயனர்களின் பெயருக்கு அருகில் சிறிய பச்சை நிறப் புள்ளி (Green Dot) தோன்றும். இதன் மூலம், யார் இப்போது வாட்ஸ்அப்பில் ஆக்டிவாக இருக்கிறார்கள் என்பதை மிக விரைவாகவும் எளிதாகவும் கண்டறிய முடியும்.
வாட்ஸ்அப் நிறுவனம் இந்த அம்சத்தை தற்போது முதற்கட்டமாகச் சோதனைக் கட்டத்தில் (Beta Testing) வைத்துள்ளது. இந்தச் சோதனை முயற்சி வெற்றிகரமாக அமைந்தால், வரும் மாதங்களில் உலகம் முழுவதும் உள்ள அனைத்துப் பயனர்களுக்கும் இந்த புதிய வசதி அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.