×

என்னது..! மழைக்கு ஜிஎஸ்டியா..? எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க..! 

 

ஆஷிஷ் குப்தா என்பவர் வெளியிட்டிருக்கும் ஒரு பதிவில் ஸ்விக்கியில் 25 ரூபாய் மழைக்கான கட்டணமாக விதிக்கிறார்கள். அந்த மழைக்கான கட்டணத்திற்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி என 4.50 ரூபாய் காசுகளை வசூல் செய்கிறார்கள் என கூறியுள்ளார்.

கூடிய விரைவில் சூரிய பகவானுக்கான கட்டணம், ஆக்ஸிஜன் கட்டணம், சுவாசிப்பதற்கான கட்டணம் உள்ளிட்டவற்றை கூட இவர்கள் வசூல் செய்வார்கள் என குறிப்பிட்டு இருக்கிறார். அவர் அத்துடன் தனக்கு ஸ்விக்கியில் தனக்கு வந்த ரசீதையும் புகைப்படம் எடுத்து பதிவு செய்திருக்கிறார். அதில் உணவு பேக்கேஜிங் கட்டணமாக 20 ரூபாய் பிளாட்பார்ம் கட்டணமாக 14.99 ரூபாய் மழைக்கான கட்டணமாக 25 ரூபாய் , உணவகத்திற்கான ஜிஎஸ்டி 14 ரூபாய், மழைக்கான கட்டணத்திற்கான ஜிஎஸ்டி 4.50 ரூபாய் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அவருடைய இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் லட்சக்கணக்கானவர்களின் பார்வையையும் ஆயிரக்கணக்கானவர்களின் கமெண்ட்களையும் பெற்றிருக்கிறது . ஒரு பயனர் அடுத்ததாக உங்களுக்கு காலிங் பெல் அழுத்துவதற்கு ஒரு கட்டணம் ,மோசமான சாலையை கடந்து வருவதற்காக ஒரு கட்டணம், போக்குவரத்து நெரிசலில் காத்திருந்ததற்காக ஒரு கட்டணம் என படிப்படியாக கட்டணங்களை அதிகரிக்க போகிறார்கள் என கூறியிருக்கிறார்.

ஒரு நபர் சிரித்துக் கொண்டே உணவு டெலிவரி செய்வதற்கு ஒரு கட்டணம் என்று கூட கேட்பதற்கு வாய்ப்புள்ளது என கூறியிருக்கிறார். ஒரு நபர் இத்தகைய ஜிஎஸ்டி வரிகளால் அரசு கஜானா நிரம்பி வழிகிறது சாமானிய மக்களோ கையில் பணமில்லாமல் இருக்கிறார்கள் எனக் கூறியிருக்கிறார். ஒரு நபர் மழைக்கான கட்டணத்திற்கு கூட ஜிஎஸ்டியா என கேள்வி எழுப்பி இருக்கிறார்.