என்னாச்சு..? ஈரோட்டில் நடைபெறவிருந்த விஜய் பொதுக் கூட்டம் தேதி திடீர் மாற்றம்..!
தவெக நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டத்தில் 16 ஆம் தேதி விஜய் பொதுக் கூட்டம் நடத்தவிருந்த நிலையில் அதன் தேதி வரும் 18ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஈரோட்டில் விஜய் தலைமையில் வரும் 16ஆம் தேதி தவெக பொதுக்கூட்டத்தை நடத்த அனுமதி கோரி அக்கட்சியின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுஜாதாவிடம் மனு அளித்திருந்தார்.
கூட்டத்தில் 40 ஆயிரம் பேர் வரை பங்கேற்பார்கள் என மனுவில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் மாபெரும் எழுச்சி ஏற்படப் போவதாகவும் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவர்கள் தேர்வு செய்திருந்த பவளத்தாம்பாளையத்தில் மாவட்ட எஸ்பி மற்றும் வருவாய் துறையினர் ஆய்வு நடத்தினர்.
இந்நிலையில், காவல்துறையின் அதீத கட்டுப்பாடுகளால், 16ஆம் தேதிக்கு பதிலாக 18ஆம் தேதி பொதுக் கூட்டம் நடத்த இருக்கிறோம் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.காவல் துறையினர் 84 நிபந்தனைகளை விதித்துள்ளனர். அவற்றில் சில நிபந்தனைகள் பூர்த்தி செய்ய முடியாததால் தேதி மாற்றப்பட்டுள்ளது. தேதி மாற்றத்திற்கு பிறகும் காவல் துறை அனுமதி தராவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்றார்.