தவெக-வில் என்ன தான் நடக்கிறது..? அமைச்சர்கள் சீனியாரிட்டி பட்டியலில் செங்கோட்டையனுக்கு 5ம் இடம்!
முதல்வர் விஜய் தலைமையிலான, தமிழக அமைச்சரவையில் 34 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களின் சீனியாரிட்டி பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
முதல்வருக்கு அடுத்த இடத்தில், நீர்வளம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஆனந்த் இடம் பெற்றுள்ளார். மூன்றாம் இடத்தில், பொதுப்பணி, நெடுஞ்சாலை, விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, நான்காம் இடத்தில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் ஆகியோர் உள்ளனர்.
அ.தி.மு.க., ஆட்சியில், பல்வேறு துறை அமைச்சராக பணியாற்றிய, தற்போதைய வருவாய்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு, ஐந்தாம் இடம் வழங்கப்பட்டுள்ளது.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதனுக்கு 11ம் இடம், சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ்குமாருக்கு 12வது இடம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகானுக்கு 13ம் இடம் கிடைத்துள்ளது.வி.சி.க.,வை சேர்ந்த சமூகநீதித் துறை அமைச்சர் வன்னி அரசுக்கு 14ம் இடம் வழங்கப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜிவிற்கு அமைச்சரவையில் கடைசி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
- முதல்வர் ஜோசப் விஜய். – பொது நிர்வாகம், உள்விருதுகள், காவல் மற்றும் உள்துறை உள்ளிட்ட முக்கியத் துறைகள்.
- அமைச்சர் ஆனந்த்- ஊரக வளர்ச்சி, நீர்வளத்துறை.
- அமைச்சர் ஆதவ் அர்ஜுனா- பொதுப்பணிகள், விளையாட்டு மேம்பாட்டு துறை.
- அமைச்சர் அருண்ராஜ்- சுகாதாரம், மருத்துவ கல்வி, குடும்ப நலத்துறை
- அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்- வருவாய், பேரிடர் மேலாண்மை துறை.
- அமைச்சர் வெங்கடரமணன்- உணவு மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர்.
- அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார்- எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர்.
- அமைச்சர் ராஜ்மோகன்- பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை.
இயற்கை வளம் முதல் வீட்டு வசதி துறை வரை
- அமைச்சர் பிரபு- இயற்கை வளத்துறை.
- அமைச்சர் கீர்த்தனா- தொழில்துறை.
- அமைச்சர் விஸ்வநாதன்- உயர்கல்வித்துறை.
- அமைச்சர் ராஜேஷ் குமார்- சுற்றுலாத்துறை.
- அமைச்சர் ஷாஜகான்- சிறுபான்மை நலத்துறை.
- அமைச்சர் வன்னியரசு- சமூக நீதித்துறை.
- அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்- போக்குவரத்து துறை.
- அமைச்சர் ராஜ்குமார்- வீட்டு வசதி, நகர்ப்புற மேம்பாட்டு துறை.
பிற்படுத்தப்பட்டோர் துறை முதல் உழவர் நலத்துறை வரை
- அமைச்சர் சம்பத்குமார்- பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை.
- அமைச்சர் விஜய் பாலாஜி- கைத்தறி, ஜவுளி மற்றும் காதித்துறை.
- அமைச்சர் விக்னேஷ்- மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை.
- அமைச்சர் தென்னரசு- வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை.
- அமைச்சர் முகமது பர்வேஷ்- தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை.
- அமைச்சர் கோவிந்தராஜ்- கூட்டுறவு துறை.
- அமைச்சர் ஜெகதீஸ்வரி- சமூக நலன் மற்றும் பெண்கள் மேம்பாட்டு துறை.
- அமைச்சர் வினோத்- வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை.
பால் வளம் முதல் காலநிலை மாற்ற துறை வரை
- அமைச்சர் விஜயலட்சுமி- பால் மற்றும் பால்வளத்துறை அமைச்சர்.
- அமைச்சர் சரத்குமார்- மனிதவள மேலாண்மை துறை.
- அமைச்சர் ரமேஷ்- இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை.
- அமைச்சர் மதன் ராஜா- குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை.
- அமைச்சர் மரிய வில்சன்- நிதி, திட்டம் மற்றும் மேம்பாட்டு துறை.
- அமைச்சர் ஸ்ரீ நாத்- மீன் வளங்கள் மற்றும் மீனவ நலத்துறை.
- அமைச்சர் கமலி- கால்நடை பராமரிப்புத்துறை.
- அமைச்சர் குமார்- செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை.
- அமைச்சர் ரஞ்சித் குமார்- வனத்துறை.
- அமைச்சர் லோகேஷ் தமிழ் செல்வன்- வணிகவரிகள் மற்றும் பதிவுத்துறை அமைச்சர்.
- அமைச்சர் ராஜீவ்- சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை
தமிழக அரசின் இந்த அதிகாரப்பூர்வ பதவி மூப்புப் பட்டியலின்படி, அரசு விழாக்களின் போது அமைச்சர்களுக்கான அமர்வு வரிசை, மரபுச் சடங்குகள் மற்றும் முன்னுரிமைகள் ஆகியவை முறைப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.