☰
×

நீங்க பேசுவது bore அடிக்கிறது... சேகர்பாபு முகத்திற்கு நேராக சொன்ன MLA விஜய் தாமு

 

வடகிழக்கு பருவமழை ஆய்வுக் கூட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு பேசும்போது 'போர் அடிக்கிறது' எனக் கூறிய தவெக எம்.எல்.ஏ. தாமுவால் மேடையில் பரபரப்பு ஏற்பட்டது. 

நீங்க பேசுவது bore அடிக்கிறது.. முகத்திற்கு நேராக சொன்ன
MLA விஜய் தாமு..🔥🔥

டென்ஷன் ஆன சேகர்பாபு..😂🤣pic.twitter.com/2EIjqImb1o

— விஜய்பாலாஜி TVK (@Palraj_Official) October 14, 2026


வடகிழக்குப் பருவ மழை தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலைமையில் நடைபெற்ற சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சேகர் பாபு பேசும்போது, அவர் பின்னால் அமர்ந்திருந்த ராயபுரம் எம்.எல்.ஏ விஜய் தாமு, 'நீங்க பேசுவது bore அடிக்குது' எனச் சொல்ல 'நான் பேசுறது bore அடிக்கிறதா... அப்போ அதற்கு எதற்கு என்னை கூப்பிட்டீங்க. போர் அடிப்பதற்காக பேசவில்லை, மக்களுக்கான பணிகள் குறித்துதான் பேசுகிறேன்’ என ஆவேசமடைந்தார் சேகர் பாபு. உடனே அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் விஜய் பாலாஜி அவரை நீங்கள் பேசுங்கள் என்று அமைதிப்படுத்தி பேச வைத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.