பெரும்பான்மை இல்லாத நிலையில் ஆளுநர் என்ன செய்வார்? விஜய்க்கு டி.கே.எஸ். இளங்கோவன் 'அட்வைஸ்'..!
May 9, 2026, 13:08 IST
திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் ஏஎன்ஐ செய்தியாளரிடம் பேசியதாவது, "தவெக தலைவர் விஜய் முதலில் பிற அரசியல் கட்சிகளிடம் முயற்சி செய்து விட்டு, அதன் பிறகு ஆளுநரை சந்திக்க வேண்டும். பெரும்பான்மை இல்லாத நிலையில் ஆளுநர் என்ன செய்வார்? பெரும்பான்மை உறுப்பினர்களின் எண்ணிக்கையுடன் சென்று அவர் ஆளுநரை சந்திப்பது தான் முறை.
அமமுக ஆதரவளிக்காத நிலையில், அக் கட்சி எம்எல்ஏவின் ஆதரவு கடிதத்தை ஏன் அளிக்க வேண்டும்? இந்த புகார் குறித்து காவல் துறை விசாரணை நடத்தும் போது உண்மை என்ன என்பது தெரிய வரும்" என்று கூறினார்.