×

இனி வரும் நாட்களில் எப்படி இருக்குமோ..? தமிழகத்தில் 10 இடங்களில் சதமடித்த வெயில்..! 

 

தமிழகத்தில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒருசில இடங்களில் பரவலாக மழை பெய்துவந்தாலும், மறுபுறம் வெய்யில் வாட்டி வதைக்கிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் நேற்று 10 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒருசில இடங்களில் பரவலாக மழை பெய்துவந்தாலும், மறுபுறம் வெய்யில் வாட்டி வதைக்கிறது. வேலூரில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், அதிகபட்சமாக வேலூரில் 106.7 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக சென்னை (மீனம்பாக்கம்) - 105.98 டிகிரி பாரன்ஹீட், திருத்தணி - 105.98 டிகிரி பாரன்ஹீட், மதுரை நகரம் - 102.92 டிகிரி பாரன்ஹீட், நுங்கம்பாக்கம் - 102.38 டிகிரி பாரன்ஹீட், பாளையங்கோட்டை - 102.38 டிகிரி பாரன்ஹீட், திருச்சி - 101.66 டிகிரி பாரன்ஹீட், மதுரை ஏர்போர்ட் - 101.3 டிகிரி பாரன்ஹீட், கடலூர் - 100.94 டிகிரி பாரன்ஹீட், தஞ்சாவூர் - 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.