×

அதிர்ச்சி தரும் பாபா வாங்காவின் கணிப்பு : 2026-ல் தங்கத்தின் விலை எவ்வளவு இருக்கும்..?

 

சமீப காலமாக தங்கத்தின் விலை கடுமையாக் உயர்ந்து வருகிறது. இதனால் நடுத்தர மக்கள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர். இன்னொரு பக்கம் தங்கத்தின் விலை உயர்வு முதலீட்டாளர்களை ஈர்த்து வருகிறது.  இதற்கு மத்தியில், பல்கேரிய ஆன்மீகவாதி பாபா வாங்காவின் பழைய கணிப்புகள் மீண்டும் பரபரப்பு செய்தியாகியுள்ளன. உலகளாவிய நிதி நெருக்கடி குறித்த அவரது எச்சரிக்கைகளை தற்போதைய சந்தை போக்குகளுடன் மக்கள் தொடர்புப்படுத்தி பேசி வருகின்றனர். 2026-ம் ஆண்டில் உலகம் "பண நெருக்கடி" சூழ்நிலையை அனுபவிக்கக்கூடும் என அவர் கணித்துள்ளார்.

பாபா வங்காவின் கணிப்புகள் மிகவும் பிரபலமானவை. பல்வேறு உலக நிகழ்வுகளை அவர் துல்லியமாக கணித்ததாக சொல்லப்படுகிறது. அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல், ஜப்பான சுனாமி, சோவியத் யூனியன் உடைந்தது என பல விஷயங்களை அவர் கணித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில், தற்போது தங்கம் விலை பாபா வங்கா கணித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

அவரது கணிப்பின்படி,2026ஆம் ஆண்டு சர்வதேச அளவில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்படக் கூடும் என்றும் இதனால், தங்கம் விலை உயரக் கூடும் என பாபா வங்கா கணித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2026ஆம் ஆண்டு மிகப்பெரிய நிதி நெருக்கடி, பணத்தட்டுப்பாடு, பங்குச்சந்தை சரிவு போன்றவை ஏற்படக் கூடும் என பாபா வங்கா கணித்துள்ளார். 

எனவே, பாபா வங்காவின் கணிப்புகளின் படி, தங்கம் உச்சம் தொடுமா என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால், சர்வதேச அளவில் நெருக்கடி ஏற்படும்போது எல்லாம் தங்கத்தின் விலை குறைந்தபாடில்லை. எப்போதுமே தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டு தான் இருக்கிறது. எனவே, 2026ஆம் ஆண்டில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

முன்னதாக, 2026ஆம் ஆண்டு தங்கம் விலை 25 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை உயரக் கூடும் என பொருளாதார வல்லுநர்கள் கூறி வருகின்றனர். 2026ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்குள் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2 லட்சத்தை நெருங்கும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.