×

1986ல் ராயல் என்ஃபீல்டு விலை எவ்வளவு தெரியுமா ? விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!

 

ராயல் என்ஃபீல்டு புல்லட் பைக் வைத்திருப்பது கெத்தாகவும், பெருமையாகவும் சிலருக்கு இருக்கிறது. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 ஆனது பல ஆண்டுகளாக சில சிறிய தொழில்நுட்ப மாற்றங்களுக்கு உட்பட்டிருந்தாலும், வடிவமைப்பாளர்கள் பைக்கின் தோற்றத்தையும் உணர்வையும் பாதுகாக்க முயற்சி செய்தனர்.

ஆல் நியூ கிளாசிக் 350 விலை ரூ. 2.2 லட்சம் என அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளம் (எக்ஸ்-ஷோரூம்) தெரிவித்துள்ளது. ஆனால், இந்த பைக்கின் விலை ரூ.18,700 என்பது உங்களுக்குத் தெரியுமா? சமூக வலைதளங்களில் தற்போது பரவி வரும் ஒரு பழைய ரசீது, ஒட்டுமொத்த பைக் பிரியர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 1986-ம் ஆண்டு வெறும் சில ஆயிரங்களில் ஒரு புல்லட் பைக்கை வாங்கி விடலாம் என்பதை பார்த்த நெட்டிசன்கள், அந்த காலத்துக்கே நாம போயிடலாம் போலயே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.அந்த பைக்கின் அன்றைய ஆன் ரோடு விலை வெறும் 18,700 ரூபாய் மட்டுமே. இது இன்றைய விலையுடன் ஒப்பிடும்போது 12 மடங்கு குறைவான விலையாகும்.

 அதில் புல்லட்டின் விலைப்பட்டியல் ரூ. 18,700 என்றும், இது 39 ஆண்டுகள் பழமையானது என்றும் சந்தீப் என்ற டீலர் வழங்கியது என்றும் காட்டினார். ஜார்கண்ட் மாநிலம் பொகாரோவில் உள்ள ஆட்டோ நிறுவனம் 36 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.18 ஆயிரத்துக்கு விற்றுள்ளனர்.