கே.என். நேரு வீட்டில் சிக்கியது என்ன?- லஞ்ச ஒழிப்புத்துறை விளக்கம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் 241 ஆவணங்கள் மின்னணு சாட்சியங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை கூறியுள்ளது.
சென்னை மற்றும் திருச்சியில் உள்ள கே.என். நேரு, அவரது சகோதரர் ரவிச்சந்திரன் மற்றும் தனிப்பட்ட உதவியாளர் ஆகியோரின் இல்லங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். டெண்டரில் தவறு நடந்துள்ளதாகவும் FIR பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் DVAC அதிகாரிகள் கூறினர். எனக்கும் எனது சகோதரருக்கும் தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் எந்த ஆவணமும் கிடைக்கவில்லை என்றும், பழைய வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் அது தொடர்பாக எதுவும் அதிகாரிகள் கேட்கவில்லை எனவும் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளிந்திருந்தார்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடைய 30 இடங்களில் நேற்று காலை முதல் சோதனை நடத்தப்பட்டதாகவும், சென்னை, திருச்சி, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், டெண்டர் முறைகேடு தொடர்பாக 241 ஆவணங்கள் மற்றும் மின்னணு சாட்சியங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.