☰
×

"எங்களுக்கு பிடித்த நிறத்தில் திருவள்ளுவர் சிலையை வைப்பதில் என்ன தவறு? நயினார் நாகேந்திரன்..!

 

சென்னை போரூரில் நேற்று (அக்.11) பிரதமர் மோடியை வரவேற்கும் நிகழ்ச்சியின்போது, பாஜகவினர் திருவள்ளுவர் சிலைக்கு காவி உடை அணிவித்து வரவேற்பு தெரிவித்த நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், எதிர்ப்புகளுக்கு இடையில், சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான 'கமலாலயத்திலும்' புதிதாக காவி நிற திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் விமரிசனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து இன்று பதிலளித்துள்ள தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், "எங்களுக்கு பிடித்த நிறத்தில் திருவள்ளுவர் சிலையை வைப்பதில் என்ன தவறு? என்றும், மற்றவர்களும் தங்களுக்கு பிடித்த நிறத்தில் திருவள்ளுவர் சிலைகளை வைத்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.