மழைநீர் தேங்கியதற்கான காரணம் என்ன?- சேகர்பாபு
Oct 18, 2026, 12:38 IST
இந்து சமய அறநிலையத்துறை அலட்சியப் போக்கில் செயல்படுவது வெட்டவெளிச்சமாகி உள்ளதாக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, “இந்து சமய அறநிலையத்துறை அலட்சியப் போக்கில் செயல்படுவது வெட்டவெளிச்சமாகி உள்ளது. கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் இதைவிட பெருமழை பெய்தபோது கூட அறநிலையத்துறை ஆணையர் அலுவலக வளாகத்தில் மழைநீர் தேங்கியது இல்லை. அனைத்து விவகாரங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி விளக்கம் கேட்கும் ஆணையர், தனது அலுவலக வளாகத்திலேயே மழைநீர் தேங்கியிருப்பதற்கு யாரிடம் விளக்கம் கேட்க போகிறார்?” எனக் கேள்வியுள்ளார்.