அஜிதாவை மாவட்ட செயலாளராக நியமிக்காததன் பின்னணி?
தமிழக வெற்றிக் கழகம் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளராக பதவி கேட்டு இன்று நடிகர் விஜயின் காரை மறித்து அக்கட்சி நிர்வாகிகள் அஜிதா பேச முயற்சித்தபோது அவரை கண்டுகொள்ளாமல் அவரின் குறைகளை கூட கேட்காமல் நடிகர் விஜய் கார் சென்றது.
தவெக கட்சி தொடங்கி, இன்னும் ஒரு தேர்தலைக் கூட சந்திக்கவில்லை. அதற்குள் சில மாவட்டச் செயலாளர்கள் மீது பாலியல் புகார், பதவி நீக்கம், கட்சி அலுவலகத்தையே முற்றுகையிடும் தொண்டர்கள் என தவெக சம்பவங்கள் தினமும் தொடர்கதையாகி வருகிறது. முக்கால்வாசி மாவட்டங்களுக்கு மா.செக்கள் நியமிக்கப்பட்டு விட்ட நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில், அந்தப் பதவிகள் எதுவும் நியமனம் செயயப்படாமலே இருந்து வந்தது. காரணம், அங்கு ஆரம்பத்திலிருந்தே கட்சிக்காக வேலை பார்த்து வந்தது அஜிதா தான் .
முக்கியமான விஷயம் என்னவெனில், இன்று மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள சாமுவேல் திமுக அமைச்சர் கீதா ஜீவனின் குடும்பத்துடன் சம்பந்தி முறை உறவினர். அஜிதா விஜய் கட்சிக்காக ஆரம்பம் முதல் இருந்தாலும் கூட கீதா ஜீவனின் சம்பந்தி முறை உறவினர் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள நாடார் சமுதாயத்தை சேர்ந்த சாமுவேல் மிக பண பலமும் சாதிய பலமும் உடையவர், ஆனால் நடிகர் விஜய்க்காக நெடுங்காலம் உழைத்த அஜிதா பண பலமோ சாதிய பலமோ இல்லாதவர் அவர் மீனவ சமுதாயத்தை சேர்ந்தவர். இதைவிட புஸ்ஸி ஆனந்துக்கு அஜிதாவை கண்டால் பிடிக்காது. இதெல்லாம் சேர்ந்து தான் அஜிதா ஓரம்கட்டப்பட்டுள்ளார்.
சரி ஒரு மாவட்ட செயலாளரை நியமிப்பது கூட அக்கட்சியின் தலைமை முடிவெடுக்க வேண்டியது, ஆனால் தன் கட்சி தலைவரை அவர் அலுவலகத்தில் சந்திக்க வந்த தனக்காக உழைத்த கட்சி நிர்வாகிகள் அஜிதா போன்றோர் வழிமறித்தும் காரை நிறுத்தி சமாதானம் சொல்லி அனுப்பாமல் அவரை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக சென்றது தான் நடிகர் விஜயின் அரசியல் அறிவு மற்றும் அவரின் அரசியல் நாகரிகத்தின் அளவு. தன் கட்சி நிர்வாகிகளை கூட சந்திக்க விரும்பாமல் பிறர் பேச்சை கேட்டு கட்சி நடத்தும் நடிகர் விஜய் எல்லாம் தமிழக முதல்வர் ஆகி மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பார். இந்த சி.டி.ஆர்.நிர்மல்குமார் பாஜக கட்சியிலிருந்து அதிமுக கட்சி தாவி பின்பு தவெக தாவியவர். இந்த ஆதவ் அர்ஜுனன் திமுக,விசிக,தவெக என கட்சி தாவியவர். இந்த புஸ்ஸி ஆனந்த்துக்கு தலைமைத்துவமே இல்லை என்கின்றனர்.
இவர்கள் எல்லாம் சேர்ந்து நடிகர் விஜய்க்காக ரசிகர் மன்றம் முதல் உழைத்தவர்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு திமுக, அதிமுக கட்சியில் பதவி கிடைக்காத அதிருப்தி தலைவர்களை பண பலம் படைத்தவர்களை சாதிய பலம் படைத்த தலைவர்களை கட்சி பதவிக்கு நியமிப்பதை பார்த்தால் தமிழக வெற்றிக் கழகம் தேர்தலுக்கு முன்பே தனது கட்சி நிர்வாகிகளின் நம்பிக்கை கூட பெறாத கட்சி தேர்தல் வியூக நிறுவனங்களுக்கு பணம் கொடுத்து பீகாரில் பிரசாந்த் கிஷோர் செய்தது போல் 30 சதவீதம் வாக்குகள் வாங்கும். நடிகர் விஜய் முதலமைச்சர் என சொல்லி தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என நினைப்பது அக்கட்சி சீக்கிரம் புதைகுழியில் தான் சிக்கப்போகிறது.
நாளைக்கு நடிகர் விஜய் புதிய படம் நடிக்க சென்றுவிடுவார். ஆனால் அவரை நம்பி தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்காக கடன் வாங்கி செலவு செய்த அஜிதா போன்ற கட்சி நிர்வாகிகள் தான் தங்கள் கடனுக்காக சொத்தை விற்று நடுத்தெருவில் நிற்கப்போகிறார்கள்.கொடுமை நடிகர் விஜய் அரசியலுக்கு மட்டுமில்லை ஒரு மனிதாபிமான அடிப்படையில் கூட தகுதி இல்லாதவர் என்பதை கரூர் 41 பேர் மரணத்தில் கூட தெரிந்து கொண்டாலும் சரி... அரசியலுக்கு புதிது என்று வாய்ப்பளித்தால் ஆனால் தன் கட்சி நிர்வாகிகள் சந்திக்க வந்ததை கூட அவர்கள் குறைகளை கேட்காமல் சென்றது அவர் பிறர் சொல்லி இயக்கினால் நடிக்க தெரிந்த நடிகர் சுயபுத்தி இல்லாத நடிகரை தமிழக ஊடகங்களும் மக்கள் தலையில் வலுக்கட்டாயமாக திணிக்க நினைப்பது அதைவிடக் கொடுமை.