×

இரவு நேர ஊரடங்கால் அரசுக்கு இவ்வளவு கோடி இழப்பா?

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கால் பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை செயலாளர் சமயமூர்த்தி தெரிவித்துள்ளார். தமிழக போக்குவரத்து துறை செயலாளர் சி.சமயமூர்த்தி செய்தியாளர்களை சந்தித்த நிலையில், “தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து வரும் ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கு படிப்படியாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு கொரோனா ஏற்பட்டால், அது பயணிகளுக்கும் பாதிப்பை உண்டாக்கும். தமிழகத்தில் 45 வயதை கடந்த ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் 37 சதவீதத்தை சேர்ந்தவர்கள் தடுப்பூசி போட்டுகொண்டுள்ளனர். இதை
 

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கால் பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை செயலாளர் சமயமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தமிழக போக்குவரத்து துறை செயலாளர் சி.சமயமூர்த்தி செய்தியாளர்களை சந்தித்த நிலையில், “தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து வரும் ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கு படிப்படியாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு கொரோனா ஏற்பட்டால், அது பயணிகளுக்கும் பாதிப்பை உண்டாக்கும். தமிழகத்தில் 45 வயதை கடந்த ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் 37 சதவீதத்தை சேர்ந்தவர்கள் தடுப்பூசி போட்டுகொண்டுள்ளனர். இதை படிப்படியாக உயர்த்தி வருகிறோம். இன்னும் ஓரிரு நாட்களில் அனைவர்க்கும் நிச்சயம் தடுப்பூசி செலுத்தப்பட்டு விடும்.ஓட்டுநர்கள், நடத்துநர்கள் விருப்பப்பட்டால் தடுப்பூசி போட்டு கொள்ளலாம். கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. பேருந்துகளில் ஏறும் பயணிகளுக்கு சானிடைசர் வழங்கப்பட்டு வருகிறது. பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறோம்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கால் 16,284 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகர சார்பில் 2,790 பேருந்துகள் இயக்ககப்பட்டு வருகிறது. அத்துடன் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 345 பேருந்துகள் இயக்கப்பட்டன. இரவு நேர ஊரடங்கால் தமிழக அரசுக்கு நாள்தோறும் 12 கோடி ரூபாய் முதல் 15 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. பேருந்து நிலையங்களிலும் கொரோனா பரவல் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்” என்றார்.