எது பிறந்தநாள் வாழ்த்தா ? தீபாவளி வாழ்த்துக்கு பிறந்தநாள் வாழ்த்து என்று சொன்ன அமைச்சர் பார்த்திபன்...!
அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கிருந்தவர்களிடம் தீபாவளி வாழ்த்துக்குப் பதிலாக "இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்... சாரிப்பா, அதையே சொல்லிச் சொல்லி பழகிடுச்சு" என்று தவறுதலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை கிளாம்பாக்கத்தில் சிறப்புப் பேருந்துகளின் இயக்கம் மற்றும் பயணிகள் வசதிகளைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் நேரில் சென்று ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, அங்குள்ள பயணிகளிடம் பேசிக் கலந்துரையாடியதுடன், அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் நிறைவாக உள்ளதா என்றும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது போக்குவரத்துத் துறை செயலாளர் இல. நிர்மல்ராஜ், போக்குவரத்துக் கழக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர். அதே போன்று மறைமலைநகரில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிகப் பேருந்து நிலையத்திற்கு அமைச்சர் ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் பொதுமக்களுக்குத் தீபாவளி நல்வாழ்த்துக்கள் எனக் கூறுவதற்குப் பதிலாக, "இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்" என்று அவர் கூறினார். அதனை அங்கிருந்த செய்தியாளர் திருத்தம் செய்தனர். இதனையடுத்து உடனடியாக தனது தவறை உணர்ந்து கொண்ட அமைச்சர், லேசான குழப்பத்துடன் "சாரிப்பா... அதயே சொல்லி சொல்லி பழகிடுச்சு" என்று கூறிவிட்டு குபீரென சிரித்தார். அதன் பின்னர், அங்கிருந்தவர்களிடம் சிரித்தபடியே தனது தீபாவளி வாழ்த்துகளை மீண்டும் பகிர்ந்து கொண்டார். அமைச்சரின் இந்த நகைச்சுவையான பேச்சு அங்கிருந்தவர்களிடையே பெரும் சிரிப்பலையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
தீபாவளி வாழ்த்துக்கு பிறந்தநாள் வாழ்த்து என்று சொன்ன அமைச்சர் பார்த்திபன்... ஆய்வின் போது எழுந்த சிரிப்பலை.. #VijayTamilanParthiban | #KilambakkamBusStand | #Buses | Diwali | #PuthiyaThalaimuraiTV https://t.co/rgdREY3K2d
— PttvOnlinenews (@PttvNewsX) November 5, 2026
தீபாவளி வாழ்த்துக்கு பிறந்தநாள் வாழ்த்து என்று சொன்ன அமைச்சர் பார்த்திபன்... ஆய்வின் போது எழுந்த சிரிப்பலை.. #VijayTamilanParthiban | #KilambakkamBusStand | #Buses | Diwali | #PuthiyaThalaimuraiTV https://t.co/rgdREY3K2d
— PttvOnlinenews (@PttvNewsX) November 5, 2026