×

பான் கார்டு செயலிழந்தால் என்னவாகும்..! உங்கள் பான் கார்டு ஆக்டிவாக உள்ளதா என்பதை எப்படிச் சரிபார்ப்பது? 
 

 

உங்கள் பான் கார்டு செயலிழந்தால் நீங்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மிகப்பெரிய பின்னடைவு என்னவென்றால், உங்களால் வருமான வரி அறிக்கையை (ITR) தாக்கல் செய்ய முடியாது. மேலும், நிலுவையில் உள்ள வரித் தொகையைத் திரும்பப் பெறவும் முடியாது. வங்கிச் சேவைகளைப் பொறுத்தவரை, புதிய வங்கிக் கணக்கையோ அல்லது டீமேட் கணக்கையோ திறக்க முடியாது.


வங்கி பரிவர்த்தனைகளிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். குறிப்பாக, ரூ.50,000-ஐ மீறும் ரொக்க பணம் நடவடிக்கைகளில் சிக்கல்கள் ஏற்படலாம். அதேபோல், செயலிழந்த பான் எண்ணுடன் கூடியவர்களுக்கு அதிகமான TDS பிடித்தம் செய்யப்படும் அபாயமும் உள்ளது.உங்களிடம் செயலிழந்த பான் கார்டு இருந்தால், அதிக TDS செலுத்த வேண்டும். மேலும், பாஸ்போர்ட் பெறுவதிலோ அல்லது அரசு மானியங்களைப் பெறுவதிலோ நீங்கள் சிக்கல்களைச் சந்திப்பீர்கள். உங்கள் பழைய பான் கார்டை இழந்தால், புதிய கார்டைப் பெறுவது மிகவும் கடினமாகிவிடும். ஏனெனில், ஆதார் எண்ணை வழங்குவது கட்டாயமாக்கப்படும்.

இந்நிலையில், தங்கள் பான் கார்டு இன்னும் செயல்பாட்டிலா என்பதை உறுதி செய்வது மிகவும் அவசியமாகியுள்ளது. இதற்காக எந்த அலுவலகத்திற்கும் நேரில் செல்லத் தேவையில்லை. 


உங்கள் பான் கார்டு ஆக்டிவாக உள்ளதா என்பதை எப்படிச் சரிபார்ப்பது?

  • உங்கள் பான் கார்டின் நிலையைச் சரிபார்ப்பது மிகவும் எளிதானது. நீங்கள் எந்த அலுவலகத்திற்கும் செல்லத் தேவையில்லை. கீழே கொடுக்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றினால் போதும்:
  • முதலில், வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்: www.incometax.gov.in முகப்புப் பக்கத்தில் உள்ள ‘Quick Links’ பகுதிக்குச் சென்று, ‘Verify Your PAN’ என்ற எளிய விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
  • ஒரு புதிய பக்கம் திறக்கும். அதில் உங்கள் பான் எண், பான் கார்டில் உள்ளபடி உங்கள் முழுப் பெயர், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.
  • உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு OTP அனுப்பப்படும். அதை உள்ளிட்டு ‘Validate’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • அதன் பிறகு உடனடியாக திரையில் ஒரு செய்தி தோன்றும். அதில் “PAN is Active, and details are as per PAN” என்று வந்தால், நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஆனால், நிலை ‘Inactive’ என்று காட்டினால், உங்கள் கார்டு இனி செல்லாது.