மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவிக்கு நேர்ந்த கதி! 80 வயதிலும் சிறைத் தண்டனை..!
May 1, 2026, 11:14 IST
தெற்காசிய நாடான மியான்மரில், 2021ம் ஆண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூச்சி தலைமையிலான ஜனநாயகத்துக்கான தேசியக் கட்சியின் ஆட்சியை கவிழ்த்து, ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியது.
அதன் பின், ஊழல் மற்றும் நாட்டின் ரகசியங்களை வெளியிட்டது உட்பட பல குற்றச்சாட்டுகளில், சூச்சிக்கு 33 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.சமீபத்தில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு, அவருடைய தண்டனைக்காலம் 27 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் 80 வயதாவதால் கருணை அடிப்படையில் அவரது தண்டனை மேலும் 9 ஆண்டுகள் குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் சூச்சி, இன்னும் 18 வருடங்கள் சிறையில் கழிக்க வேண்டியுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.