ஊடகவியலாளரை தீவிரவாதியைப் போல கைது செய்யும் அளவிற்கு அப்படி என்ன நேர்ந்தது?நயினார் நாகேந்திரன் கேள்வி..!!
Dec 13, 2025, 20:34 IST
பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் பாசிச திமுக அரசு.
கடப்பாறையை வைத்து வீட்டின் கதவை உடைத்து ஊடகவியலாளர் சவுக்கு சங்கரை திமுக அரசின் ஏவல்துறை கைது செய்துள்ளது மிகுந்த கண்டனத்திற்குரியது.
பெண்களின் பாதுகாப்பை வேட்டையாடிய மனித மிருகங்களும், போதை கடத்தல் மன்னன்களும், சட்டம் ஒழுங்கை சீரழித்து வரும் சமூக விரோதிகளும் தமிழகத்தில் சர்வ சாதாரணமாக உலவி வரும் வேளையில், ஒரு ஊடகவியலாளரைத் தீவிரவாதியைப் போல கைது செய்யும் அளவிற்கு அப்படி என்ன அவசியம் நேர்ந்தது?
ஆளும் அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் ஊடகவியலாளர்களைக் கைது செய்து முடக்குவதை மட்டுமே முதன்மை நோக்கமாகக் கொண்டு தமிழகத்தில் கருத்து சுதந்திரத்தை ஒட்டுமொத்தமாகக் குழி தோண்டிப் புதைக்க நினைக்கும் திமுக
அரசு தனது பாசிசப் போக்காலேயே வீழும்.என தெரிவித்துள்ளார்.