ஓபிஎஸ்-க்கு என்ன ஆச்சு?.. வீட்டுக்கு ஓடோடிச் சென்ற உதயநிதி ஸ்டாலின்..!!
Oct 30, 2026, 18:19 IST
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவரது இல்லத்தில் இன்று (அக்.30) நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
இதையடுத்து அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்த உதயநிதி ஸ்டாலின், விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தார். இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
முன்னதாக ஓபிஎஸ், உடல்நிலை சரி இல்லாததால் வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வரும் நிலையில் பசும்பொன் செல்ல முடியவில்லை என்பதால் சென்னையில் உள்ள தனது வீட்டில் முத்துராமலிங்க தேவர் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.