சோனா வேண்டும் என அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
நடிகை சோனா யூ டியூப் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
முதன்முதலில் மளிகை கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தேன். அப்போது, எதிர்வீட்டில் ஜீவிதா ராஜசேகரன் இருந்தார்கள். அவர்கள் மேனேஜர் வைத்து தினமும் கேட்பார்கள். நான் தினமும் ஓடிவிடுவேன். இது சினிமாவில் இணைவதற்கு 6 மாதத்திற்கு முன்பு ஆகும்.
எனக்கு 14 வயது இருக்கும்போது புரசைவாக்கத்தில் நானும், அம்மாவும் ஷு வாங்கச் சென்றிருந்தோம். அப்போது கஸ்தூரி ராஜா வந்திருந்தார். அவர் அடம்பிடித்தார். எங்கம்மா முடியாது என்றுவிட்டனர்.
மிஸ் தென்னிந்தியாவில் பங்கேற்று அதில் வெற்றி பெற்றேன். அதன்மூலமாகவே பூவெல்லாம் உன் வாசம் படம் வாய்ப்பு கிடைத்தது. அங்கிருந்து ஷாஜஹான் கிடைத்தது. இப்போ உள்ள தலைமுறைதான் மாறிவிட்டார்கள். அப்போது இருந்தவர்கள் ஜுனியர் ஆர்டிஸ்ட்டாக இருந்தாலும் கேட்டுவிட்டு போவார்கள். விஜய்யின் மிகப்பெரிய ரசிகை நான்.
47 வயதான நடிகை சோனா 2001ம் ஆண்டு பூவெல்லாம் உன் வாசம் படம் மூலமாக தமிழில் நடிகையாக அறிமுகமானார். பின்னர், ஷாஜஹான், சிவப்பதிகாரம், மிருகம், குசேலன் என பல படங்களில் நடித்தார். மிருகம் படத்திற்கு பிறகு மிகவும் பிரபலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் சோனா நடித்துள்ளார். கடைசியாக தமிழில் பூமர் அங்கிள் என்ற படத்தில் நடித்துள்ளார்.
2010ம் ஆண்டு ஜெய் நடிப்பில் வெளியான கனிமொழி என்ற படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சிவாவுடன் இணைந்து தயாரித்திருந்தார். ஆனால், அந்த படம் பெரிய வெற்றி பெறவில்லை. இந்திய திரையுலகின் பிரபலமான நடிகர் தனுஷின் தந்தையான, இயக்குனர் கஸ்தூரி ராஜா மிகவும் பிரபலமான இயக்குனர். 1991ம் ஆண்டு என் ராசாவின் மனசிலே படம் மூலமாக இயக்குனரான அவர் சோலையம்மா, ஆத்தா உன் கோயிலிலே, எட்டுப்பட்டி ராசா, என் ஆசை ராசாவே, துள்ளுவதோ இளமை என பல படங்களை இயக்கியுள்ளார்.