நடிகை ஷகிலாவுக்கு என்ன ஆச்சு..?கழுத்தில் ஆப்ரேஷன்..!!
1990களில் நடிகை ஷகிலா பல கவர்ச்சிப் படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே வைத்து இருக்கிறார்
மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால் ஆகியோரின் படங்களை விட ஷகிலாவின் படங்கள் வசூலை வாரிகுவித்தது. கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, ஆந்திரா என பல இடங்களிலும் ஷகிலாவிற்கு ரசிகர்கள் உள்ளனர்.
கவர்ச்சி படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்ட ஷகிலா,விஜய் தொலைக்காட்சியில் குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் இறுதி வரை வந்து விதவிதமான சமையல்களை செய்து அசத்தினார். இதுவரை கவர்ச்சி நடிகை என பெயர் எடுத்த ஷகிலா மீதான கண்ணெட்டத்தையே அந்த நிகழ்ச்சி மாற்றியது. அதுமட்டுமில்லாமல் குக்வித் கோமாளியில் கலந்து கொண்ட அனைவரும் ஷகிலா அம்மா என அன்போடு அழைத்தனர்.
குக்வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு ஷகிலா, தொலைக்காட்சிகளில் பிஸியாகவே இருக்கிறார். பிரபலமானவர்களை பேட்டி எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் கழுத்தில் கட்டுடன் மருத்துவமனையில் படுக்கையில் இருக்கும் ஷகிலாவின் புகைப்படம் ஒன்று வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களில் கழுத்து அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக அவரே பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் அவருக்கு என்ன ஆனது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், அதற்கு அவரே தனது யூடியூப் பக்கம் மூலமாக விளக்கம் கொடுத்துள்ளார்.
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பிறகு, தனது யூடியூப் சேனலில் பதிவிட்ட ஒரு வீடியோவில், ஒரு சைடாக படுத்துக்கொண்டு நீண்ட நேரம் மொபைல் போன் பயன்படுத்தியதன் விளைவாக தனது கழுத்து நரம்புகள் பாதிக்கப்பட்டதாகவும், அதற்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் ஷகிலா கூறியிருக்கிறார். அறுவை சிகிச்சைக்கு 3 லட்சம் ரூபாய் செலவானதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
அதே வீடியோவில், “ஒரு இடத்தில் படுத்துக்கொண்டே தொடர்ந்து நான்கு மணி நேரம் வரை என் மொபைலில் கேம் விளையாடுவேன். டீ குடிக்க வேண்டும் என்றால் மட்டுமே எழுந்திருப்பேன். டீ குடித்துவிட்டு மீண்டும் வந்து அதே கேம் விளையாடுவேன். கேம் மட்டுமல்ல யூடியூப், இன்ஸ்டாகிராமில் பல மணிநேரம் ரீல்ஸ் பார்ப்பேன். இப்படி மொபைல் போனை அதிகமாக பயன்படுத்தியதன் காரணமாக என் கழுத்தில் உள்ள முக்கிய இரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு இப்போது அது அறுவை சிகிச்சை வரை வந்துவிட்டது.” என்று ஷகிலா கூறியிருக்கிறார்.