இபிஎஸ் - பியூஷ் கோயல் சந்திப்பில் நடந்தது என்ன ? நயினார் நாகேந்திரன் விளக்கம்..!
Dec 24, 2025, 11:15 IST
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்,திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதே அதிமுக-பாஜக கூட்டணியின் இலக்கு என்றார்.
ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைவது குறித்து அரசியலில் நிரந்தர நண்பன், பகைவன் இல்லை என்றார். ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றுசேர வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தேமுதிக மற்றும் பாமக கூட்டணியில் இணையுமா என்பது பொங்கலுக்குப் பிறகே தெரியவரும் என்றும்,டிசம்பரில் தெளிவு பிறக்கும் என்று கூறினேன், ஆனால் அது ஒரு மாதம் தள்ளிப் போகும்” என்றும் நயினார் தெரிவித்தார்.
சட்டமன்ற தேர்தலில் ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றுசேர வேண்டும் என்பது குறித்து இபிஎஸ் – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இடையேயான சந்திப்பில் பேசப்பட்டதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.