×

இன்னும் என்ன என்ன சொல்ல போறீங்க..? நான் சினிமா விட்டு போறேன், கல்யாணமாகி 4 பிள்ளைங்க இருக்கு... வேற என்ன?-  திரிஷா 

 

நடிகை திரிஷா இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லையா என்ற கேள்விக்கு நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் தனது யூட்யூப் சேனலில் அளித்த பதில் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சித்ரா லட்சுமணன் அளித்த பதிலில், நடிகை திரிஷா பற்றி வெளியாகியிருக்கும் அந்த செய்தி உண்மைதான். சமீபத்தில் ஒரு சில தயாரிப்பாளர்கள் கூட எனக்கு அதை உறுதிப்படுத்தினார்கள் என்று சித்ரா லட்சுமணன் பதிலளித்துள்ளதாக முன்னணி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.

இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், திரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் நையாண்டி கலந்த பதிலை பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில் “என் கதை முடிந்து விட்டதா? நான் சினிமாவை விட்டுவிட்டேன், ஒரு பணக்காரரை திருமணம் செய்து கொண்டேன், நான்கு குழந்தைகளுக்கு அம்மாவாகி விட்டேன்... அவங்களுக்கு நேத்து தான் ரெண்டு வயசு ஆச்சு. இன்னும் ஏதாவது சேர்க்க வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பிய அவர், தற்போது பரவி வரும் தகவல்கள் அனைத்தும் கற்பனையே என்பதைக் குறிப்பிடும் விதமாக அந்த பதிவை போட்டுள்ளார் திரிஷா. திரிஷாவின் இந்த பதில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.