அரசு ஏற்றுக் கொண்ட தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் என்ன தெரியுமா?
Sep 4, 2026, 16:46 IST
கடந்த 2 வாரங்களாக தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசின் சார்பாக அவர்களை சந்தித்து, அவர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென்ற கவன ஈர்ப்பு தீர்மானத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தளி ராமச்சந்திரன் பேரவைக்கு கொண்டு வந்தார். இந்த சூழலில் அமைச்சர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தூய்மை பணியாளர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அரசு ஏற்றுக் கொண்ட தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளின் விவரம்
- உணவுப்படி ஒரு நாளைக்கு ரூ.50 (அக்டோபர் முதல்)
- பெண்களுக்கு கழிப்பறை, ஓய்வறை 197 வார்டுகளில் ஏற்பாடு
- போராட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ்
- 4, 5, 7, 8 மண்டலங்களில் 160 வாகனங்கள் வழங்கப்படும்
- பணியில் இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்
- மழைக்காலங்களில் ரெயின் கோட்
- தூய்மை பணியாளர்கள் முதல்வரை சந்திப்பதற்கு ஏற்பாடு
- வாரத்திற்கு ஒரு முறை கை கிளவுஸ்
- 4 மாதங்களுக்கு ஒருமுறை கமிஷனர் தலைமையில் ஆலோசனை
- 4, 7, 8 மண்டலங்களில் சங்க அலுவலகங்கள் ஏற்பாடு செய்து தரப்படும்
வார விடுப்பு, மகப்பேறு விடுப்பு, மாதவிடாய் விடுப்பு தொடர்பாக அக். 3-ஆம் தேதி அமைச்சர்கள் தலைமையில் 2-ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.