இவங்க என்ன GOVERNMENT நடத்துறாங்களா...கண்காட்சி நடத்துறாங்களா : ஈரோடு பொதுகூட்டத்தில் விஜய் பேச்சு..!
தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பை நடத்தினார் இந்நிலையில் விஜய் பேசியதாவது,
பொதுவா நல்ல காரியம் ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னதை மஞ்சள் வெச்சு தான் ஸ்டார்ட் பண்ணுவாங்க... நம் வீட்டில் கூட நம் அம்மாக்கள் தங்கைகள் நமக்காக நாம நல்ல இருக்கனும் என்பதற்காக மஞ்ச புடவையை கட்டிக்கிட்டு தான் வேண்டிகுவாங்க...அப்படி அந்த மஞ்சள் நாளே ஒரு தனி VIBE தாங்க.
வாழ்நாள் பூரா உங்களுக்கு நன்றியுடன் இருப்பேன்.அவங்களுக்கு தெரியாது.இந்த விஜய்-ஐ இந்த விஜி -ஐ மக்கள் ஒரு போதும் கைவிட மாட்டாங்க. மக்கள் கூடவே நிப்பாங்கனு அவங்களுக்கு தெரியாம போச்சு.நல்ல விஷயத்தை செஞ்சிது கதை சொன்ன பரவாஇல்ல எதையும் பண்ணமா கதைகளை மட்டும் அடிச்சு விடுறது.வள்ளுவர் கோட்டத்திற்கு கொடுக்கிற அக்கறை இங்க மக்கள் வாழ்வாதாரத்தை மேல காட்டலாம்ல. இவங்க என்ன GOVERNMENT நடத்துறாங்களா...கண்காட்சி நடத்துறாங்களா...மக்களை பத்தி ஒண்ணுமே யோசிக்கிறது இல்ல...
உங்களுக்கு நீங்க கொள்ளை அடிச்சு வெச்சி இருக்கிற காசு தான் துணை ஆன எனக்கு எல்லை இல்ல பாசம் வெச்சு இருக்கிற மாஸ் தான் துணை.
அண்ணாவும் MGR-ம் தமிழ்நாட்டோட சொத்து அத பயன்படுத்த யாரும் இங்க COMPLAINT எல்லாம் பண்ண முடியாது.அண்ணா எங்களோடது MGR எங்களோடது நீங்க எல்லாம் எடுத்துக்க முடியாது என யாரும் சொல்ல முடியாது..
நாங்க ஒரு வழில அரசியல் செஞ்சிட்டு போயிடு இருக்கோம்.உங்களுக்கு தான் tvk ஒரு பொருட்டே இல்ல தானே அப்புறம் ஏன் கதறுறீங்க.. ஏன் புலம்பி தள்ளிட்டு இருக்கீங்க. இது எப்படி இருக்கு தெரியுமா எனக்கு பயம் இல்ல எனக்கு பயம் இல்ல அப்படி சத்தமா பாடிகிட்டு சின்ன பசங்க மாதிரி நடுங்கிட்டு போற மாதிரி இருக்கு. மொதல்ல மண்டைல இருக்கிற கொண்டையை மறைங்க சார்.
இப்போ ஈரோடு பக்கம் இருக்கிற பிரச்னையை பத்தி பேசுவோம்
-
மஞ்சள் நகரத்திற்கும் ஒன்னும் பண்ணல.. மஞ்சள் விவசாயிகளுக்கும் ஒன்னும் பண்ணல இது வரைக்கும் என்ன செஞ்சி இருக்காங்கனு பார்த்தா ஒரு பெரிய ஸிரோ தான்..கரும்புக்கு அரசாங்கம் விலை நிர்ணயம் பண்றாங்க அதுலயும் பல பிரச்சனை. நெல் கொள்ளுதல் செய்யுறதுல ஊழல்.
-
24 /7 அவங்க யோசனை என்ன தெரியுமா இந்த விஜய்யை எப்படி முடக்கலாம். தமிழக வெற்றி கழகத்தை எப்படி எல்லாம் முடக்கலாம். அப்படி தான் அவங்களோட சிந்தனையே
-
பவானி நொய்யல் ஆறு அமராவதி இணைப்பு திட்டத்திற்கு ஒரு துரும்பை கூட கிள்ளி போடல வாக்குறுதி நம்பர் 103 ..சொன்னீங்களே செஞ்சாங்களா..?
-
ஆறுகளை சுத்த படுத்த பல ஆயிரம் நிதி ஒதுக்குவோம்...ஆற்றை சுத்த படுத்துவோம் சொன்னாங்களே செஞ்சாங்களா..? ஆன ஆற்று மணல் கொள்ளையை மட்டும் சரியா செய்வாங்க.
-
கொஞ்சம் அசந்தா பல மாவட்டங்களில் மணல் காணாமல் போன மாதிரி மழை காணாமல் போன மாதிரி நம் ஈரோடு மாவட்டத்தில் இருக்கிற செம்மண் காணாமல் போக வாய்ப்பு இருக்கு மக்களே...நம் மண்ணுக்கும் நம் விவசாயிகளுக்கும் தான் இந்த மோசமான நிலைமை.
-
நம்மளும் கத்துறோம் போராடுறோம் இவங்க ஏதாவது கண்டுக்கிறாங்களா. கொஞ்சம் யோசிங்க...
-
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் போய் மக்கள் பிரச்சனை பேசிட்டு வரேன்.. இது அரசியல் இல்லையா..? அப்ப எது அரசியல்.. உங்கள மாதிரி தனிப்பட்ட முறையில் தரக்குறைவா அசிங்க அசிங்கமா பேசுறது தான் அரசியல்னா அந்த அரசியல் நமக்கு வராது. வராதுனா...... நல்லாவே வரும் உங்களை விட எனக்கு நல்லாவே வரும்.. வேணாம்னு விட்டு வெச்சி இருக்கோம். அப்ப உங்களுக்கு நமக்கும் என்ன வித்தியாசம்.
-
காஞ்சிபுரத்துல நாங்க சொன்னது எல்லாம் தப்பு தப்பா புரிஞ்சிகிட்டு இப்ப சொல்றேன் நான் சலுகைகளுக்கு எதிரானவன் கிடையாது,மக்களுக்கான சலுகைகளை இலவசம் என சொல்றதுல எனக்கு உடன்பாடு கிடையாது.
-
மக்கள் காசுல மக்களுக்கு செய்யுறதுல எப்படி இலவசம் சொல்லுவீங்க. அப்படி கொடுத்தது ஓசி ல போறேன் ஓசி ல போறேன் அசிங்க படுத்துறீங்க .என்ன கேக்குறது ஆள் இல்லை நினைசீங்களா
-
மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்..இந்த விஜய் கேள்வி கேட்பான்.