×

இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவு வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன?

 

ஏப்ரல் 21ஆம் தேதி மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் வரை பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் ஒலிபெருக்கி பிரசாரங்களை கண்டிப்பாக நடத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TV, FM, WHATSAPP, FACEBOOK, X போன்றவற்றில் தேர்தல் பரப்புரை செய்யவும், இசை, கேளிக்கை நிகழ்ச்சிகள் மூலம் வாக்காளர்களை ஈர்க்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறினால் 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வாக்காளர் அல்லாதவர்கள் மாலை 6 மணிக்குள் தொகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்றும், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் உள்ளிட்ட இடங்களில் வெளியாட்கள் யாரும் தங்கக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விருந்தினர் மற்றும் திருமண மண்டபங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்றும்,
நட்சத்திர பேச்சாளர்கள் வாகன அனுமதி பரப்புரை நிறைவடைந்த பின் செல்லாது எனவும் கூறப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு நாளன்று ஒவ்வொரு வேட்பாளருக்கும் 3 வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும், வாக்காளர்களை வேட்பாளர்களின் வாகனத்தில் அழைத்து செல்லக்கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் வெளியே 2 நபர்களை கொண்ட தேர்தல் அலுவலகத்திற்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.