×

#BREAKING திமுக தோல்விக்கு முக்கிய காரணங்கள் என்ன? - கள ஆய்வறிக்கையில் ’ஷாக்’ தகவல்

 

தேர்தல் தோல்வி குறித்து ஆராய அமைக்கப்பட்ட தி.மு.க. கள ஆய்வுக்குழுவின் அறிக்கை ஸ்டாலினிடம் தாக்கல் செய்யப்பட்டது.

அதன்படி,

  • கூட்டுறவு சங்கம், ஆவின் உள்ளிட்ட தேர்தல்களை நடத்தாததால் திமுக நிர்வாகிகள் அதிருப்தி என அறிக்கையில் தகவல்
  • விஜய்க்கு இருக்கும் செல்வாக்கை எடுத்து கூறினால் மாவட்ட பொறுப்புகளில் இருந்தவர்கள் கண்டுகொள்ளவில்லை என்று தகவல்
  • மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத பெண்கள் திமுக அரசு மீது கடும் அதிருப்தியில் இருந்துள்ளனர் - ஆய்வு அறிக்கை
  • தேர்தல் அறிக்கையில் கூறியது போல் மகளிர் உரிமைத் தொகை கொடுக்காததால் பெண்கள் கடுமையான அதிருப்தி - ஆய்வு அறிக்கை
  • திமுக ஆட்சியில் இருந்தும் கூட்டுறவு சங்க தேர்தல், ஆவின் சங்க தேர்தலை நடத்தாததால் திமுகவினர் அதிருப்தி - ஆய்வு அறிக்கை
  • கோவில் அறங்காவலர்கள் நியமனங்களில் உண்மையான திமுகவினர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் - ஆய்வு அறிக்கை
  • இளைஞர்களின் சக்தியை திமுக முழுமையாக பயன்படுத்தவில்லை.
  • குறைகளை அமைச்சர்களிடம் கொண்டு செல்ல உதவியாளர்கள் முட்டுக்கட்டையாக இருந்ததாகவும் தகவல்
  • கட்சி பொறுப்புகளில் இல்லாத மூத்த நிர்வாகிகளை கண்டுகொள்ளவில்லை என்றும் தேர்தல் முடிவுகளை ஆராய அமைக்கப்பட்ட திமுக கள ஆய்வு குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.