☰
×

பெண்களுக்கான சிறந்த நிறுவனங்கள் எவை..? – சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற அவதார் & சேராமவுண்ட் விருது விழா!

 

அவதார் கரியர் கிரியேட்டர்ஸ் லிமிடெட் (Avtar Career Creators Limited) மற்றும் சேராமவுண்ட் (Seramount) இணைந்து, சென்னையில், அண்மையில் (3 நவம்பர் 2026)  நடைபெற்ற "சிறந்தவற்றுள் சிறந்த  நிறுவனங்களுக்கான மாநாடு மற்றும் விருதுகள்" (‘Best of Best (BoB) Conference & Awards 2026’) வழங்கும் நிகழ்வில், 'அனைவரையும் உள்ளடக்கிய கலாச்சார அமைப்பு' (‘Circle of Inclusive Cultures’ - CIC ) ஒன்றைத் தொடங்கின. நிறுவனங்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும், பிற நிறுவனங்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும், ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் பணியிடக் கலாச்சாரத்தை வலுப்படுத்தவும் இந்தப் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் நடைபெறும் பி.ஓ.பி. (BoB) மாநாடு, அவதார் மற்றும் சேராமவுண்ட்  நிறுவனங்கள் நடத்தும் இந்தியாவின் பெண்கள் பணி புரிவதற்கான சிறந்த நிறுவனங்கள் (Best Companies for Women in India - BCWI), மிகவும் உள்ளடக்கிய நிறுவனங்களுக்கான குறியீடு (Most Inclusive Companies Index - MICI) மற்றும் சுற்றுச்சூழல், சமூகம், நிர்வாகம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் நிறுவனங்கள் (Best Companies for ESG - BCESG) ஆகிய மதிப்பீடுகளில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களைக் கொண்டாடும் நிகழ்வாகும். 

இந்த ஆண்டு, பணியிட நலனுக்கான சிறந்த நிறுவனங்கள் (Best Companies for Workplace Wellness - BCWW) என்ற புதிய அளவுகோலின் கீழும் நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டன.

பணியிடங்களில் அனைவரையும் உள்ளடக்கிய கலாச்சாரத்தை மேம்படுத்துவதிலும், நிறுவனங்களின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்வதிலும் அவதார் மற்றும் சேராமவுண்ட் நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் நீண்டகால முயற்சிகளின் அடுத்தகட்டமாக சி.ஐ.சி. (CIC) அமைப்பின் தொடக்கம் அமைந்துள்ளது. நிறுவனங்கள், தங்களது செயல்பாடுகள் எந்த நிலையில் உள்ளன என்பதைப் புரிந்துகொள்ள இந்த மதிப்பீடுகள் உதவுகின்றன. அதே சமயம், பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் ஒன்றிணைந்து கற்றுக்கொள்ளவும், நடைமுறை அனுபவங்களையும், சிறந்த செயல்பாட்டு முறைகளையும் பகிர்ந்துகொள்ளவும் சி.ஐ.சி., வாய்ப்புகளை உருவாக்குகிறது.

தமிழ்நாடு அரசின் தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் எஸ். விஜயகுமார் இ.ஆ.ப., இம்மாநாட்டின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, காணொலி வாயிலாக சி.ஐ.சி. அமைப்பைத் தொடங்கி வைத்தார்.

இந்த முயற்சி குறித்துப் பேசிய அவர், “பொருளாதார வளர்ச்சி என்பது அனைவருக்கும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதாகும். இதில் தமிழ்நாடு எப்போதும் உறுதியாக இருந்து வருகிறது. நாம் புதிய துறைகளில் விரிவடையும் நிலையில், இந்த வளர்ச்சியில் பெண்களும் தீவிரமாகப் பங்கேற்க வேண்டும். அரசாங்கம் கொள்கைகளை உருவாக்கலாம்; நிறுவனங்கள் சிறந்த பணிச்சூழலை உருவாக்கலாம். ஆனால், உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நிறுவனங்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும், ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்ளவும், பல்வேறு துறைகளிலும் தரத்தை உயர்த்தவும் அனைவரையும் உள்ளடக்கிய கலாச்சார அமைப்பு (Circle of Inclusive Cultures) வாய்ப்பளிக்கிறது. இந்த முக்கியமான முயற்சியை முன்னெடுத்துச் செல்லும் அவதார் நிறுவனத்தைப் பாராட்டுகிறேன்,” என்றார்.

சி.ஐ.சி. அமைப்பு குறித்துப் பேசிய அவதார் கரியர் கிரியேட்டர்ஸ் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சௌந்தர்யா ராஜேஷ் கூறியதாவது: “கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, எங்களது நிறுவன மதிப்பீட்டு ஆய்வுகள் மூலம் நிறுவனங்கள் அனைவரையும் உள்ளடக்கிய பணிச்சூழலை உருவாக்குவதில் தங்களது நிலையைப் புரிந்துகொள்ளவும், உயர்ந்த தரநிலைகளைப் பின்பற்றும் நிறுவனங்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும் உதவி வருகிறோம். இந்த முயற்சியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் வகையில், ஆண்டு முழுவதும் நிறுவனங்கள் தங்களது நடைமுறை அனுபவங்களையும், கருத்துகளையும் பரிமாறிக் கொள்வதற்கான வாய்ப்புகளை எங்களது 'அனைவரையும் உள்ளடக்கிய கலாச்சார அமைப்பு' உருவாக்குகிறது.

ஒவ்வொரு நிறுவனமும் அனைவரையும் உள்ளடக்கிய கலாச்சாரத்தை உருவாக்குவதில் வெவ்வேறு நிலைகளில் உள்ளன. சில நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்படும் நடைமுறைகளைக் கண்டறிந்துள்ளன. மற்ற சில நிறுவனங்கள் என்ன மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதை ஆராய்ந்து வருகின்றன. இவ்வாறு ஒவ்வொரு நிறுவனத்திடமிருந்தும் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. இதுபோன்ற கலந்துரையாடல்களைச் சாத்தியமாக்கும் வகையில் சி.ஐ.சி. வடிவமைக்கப்பட்டுள்ளது. பங்கேற்கும் ஒவ்வொரு நிறுவனமும் மேலும் வலுப்பெறவும், பல்வேறு துறைகளிலும் நீடித்த மாற்றத்தை ஏற்படுத்தும் தாக்கத்தை உருவாக்கவும் உதவுவதே எங்களது நோக்கம்” என்றார்.

சி.ஐ.சி. அமைப்பின் மூலம் முதன்மைச் செயல் அதிகாரிகள் (CEOs), மனிதவளத் துறைத் தலைவர்கள் (CHROs) ஆகியோரை உள்ளடக்கிய பணிச்சூழல் முன்னெடுப்புகளுக்கான தலைவர்கள் மற்றும் இதர முக்கியப் பொறுப்பாளர்களுக்கெனத் தனித்தனி கலந்துரையாடல் மற்றும் சக நிறுவனங்களிடமிருந்து கற்றல் குழுக்கள் உருவாக்கப்படும். அவதார் மற்றும் சேராமவுண்ட்  நிறுவனங்களின் மதிப்பீட்டு ஆய்வுகளில் பங்கேற்ற நிறுவனங்கள் மட்டுமின்றி, பிற நிறுவனங்களும் இதில் உறுப்பினர்களாக இணையலாம்.

சி.ஐ.சி. தொடக்கம் குறித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்த சேராமவுண்ட் நிறுவனத்தின் தலைவர் சுபா வி. பேரி (Subha v Berry) கூறியதாவது: “இந்தியாவில் உள்ள பல்வேறு நிறுவனங்களிடம் எவ்வளவு பெரிய அளவிலான கூட்டு அறிவும், அனுபவமும் இருக்கிறது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். சில நிறுவனங்கள் பெண்களைத் தலைமைப் பொறுப்புகளுக்கு முன்னேற்றுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளன. வேறு சில நிறுவனங்கள் பணிபுரியும் பெற்றோருக்கு ஆதரவளிப்பதில் புதுமையான அணுகுமுறைகளை உருவாக்கியுள்ளன. இந்த அனுபவங்களிலிருந்து மற்ற நிறுவனங்களும் ஏன் பயனடையக் கூடாது?

வாடிக்கையாளர்கள், திறமையான பணியாளர்கள் மற்றும் சந்தைப் பங்களிப்புக்காக நாம் போட்டியிடுகிறோம். அது வணிகத்தின் இயல்பு. ஆனால், அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்கும் பணிச்சூழலை உருவாக்குவதில் நமது சிறந்த யோசனைகளை ஏன் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளக் கூடாது? வெற்றிகளை மட்டுமல்லாமல், பலனளிக்காத முயற்சிகளையும் பகிர்ந்துகொள்ள வேண்டும். ஏனெனில், சில நேரங்களில் நாம் கற்றுக்கொள்ளும் மிகச் சிறந்த பாடங்கள் தோல்வியடைந்த முயற்சிகளிலிருந்தே கிடைக்கின்றன,” என்றார்.

இந்த மாநாட்டுத் தலைப்பான 'நிறுவன வளர்ச்சிக்கான மூலதனமாகக் கலாச்சாரம்' (‘Culture as Capital’) என்ற கருத்தை மையமாகக் கொண்டு, இ.எஸ்.ஜி. (ESG) மற்றும் உள்ளடக்கிய பணிச்சூழலின் வணிக முக்கியத்துவம், செயற்கை நுண்ணறிவு காலத்தில் தலைமைத்துவத்தை மேம்படுத்துவதற்கான கருவியாக உள்ளடக்கிய கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் சிந்தனையைத் தூண்டும் குழு விவாதங்களும், நிபுணர்களின் உரைகளும் இடம் பெற்றன.

ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர், இன்ஃபோசிஸ் மற்றும் இண்டஸ் இண்ட் வங்கியின் முன்னாள் தலைவர், அசோக் லேலண்டின் முன்னாள் செயல் துணைத் தலைவர் எனப் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்த திரு. ஆர். சேஷசாயி, இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு,  வெற்றி பெற்ற நிறுவனங்களுக்கு விருதுளை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில், “முடிவுகள் எவ்வாறு எடுக்கப்படுகின்றன, மக்கள் எவ்வாறு இணைந்து பணியாற்றுகிறார்கள், இறுதியில் நிறுவனங்களின் செயல்பாடுகள் எவ்வாறு அமைகின்றன என்பதை நிறுவனக் கலாச்சாரமே தீர்மானிக்கிறது. இத்தகைய கலாச்சாரத்தை உருவாக்க மனிதநேயமிக்க தலைமைத்துவமும் பொறுப்புணர்வும் அவசியம். இதனால்தான் நிறுவனங்களின் முன்னேற்றத்தை அளவிடுவதற்கு மதிப்பீடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த விவாதத்தை முன்னெடுத்துச் செல்வதில் அவ்தாரின் பி.ஓ.பி. (Best of the Best) தளம் முக்கியப் பங்காற்றி வருகிறது. இந்த அனுபவங்களையும் கற்றல்களையும் செயல்பாடுகளாக மாற்றி, ஒவ்வொரு முடிவிலும் நிறுவனக் கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் அளிப்போம்,” என்றார்.

பி.ஓ.பி. மாநாட்டின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஸ்டார்ட் அப் டி.என். (StartupTN) அமைப்பின் தலைவர் திரு. சிங்கை ஜி. ராமச்சந்திரன் கூறுகையில், “தமிழ்நாட்டின் தொழில்துறை வலிமை என்பது அதன் உள்கட்டமைப்பு மற்றும் முதலீடுகளில் மட்டுமல்லாமல், அதன் மனித வளத்திலும் அடங்கியுள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய பணிச்சூழல் மாநிலத்தின் போட்டித்திறனை மேலும் அதிகரிக்கிறது. எனவே, ஒவ்வொரு நிறுவனமும் நம்பிக்கை மற்றும் நியாயமான வாய்ப்புகள் நிறைந்த பணிக் கலாசாரத்தை உருவாக்க முதலீடு செய்ய வேண்டும். அவதார் மற்றும் சேராமவுண்ட் நிறுவனங்களின் 'இந்தியாவின் பெண்களுக்கான சிறந்த நிறுவனங்கள்' (‘Best Companies for Women in India’) போன்ற முன்னணி மதிப்பீட்டு ஆய்வுகள் மூலம் தங்களது முன்னேற்றத்தை அளவிடுவதும் அவசியம். இதன் மூலம் தமிழ்நாட்டின் தொடர்ச்சியான வளர்ச்சிக்குப் பங்களிப்பதோடு, நிறுவனங்களின் நீண்டகால வெற்றியையும் வலுப்படுத்த முடியும்,” என்றார்.

இந்த நிகழ்வில், பெண்களுக்கு மேலும் உள்ளடக்கிய பணிச்சூழலை உருவாக்குவதில் முன்னின்று செயல்பட்ட ஆண் தலைவர்களை அங்கீகரிக்கும் வகையில், அவர்களுக்கு 'மேல் அலய் லெகசி அவார்ட்' (‘Male Ally Legacy Award’ - MALA) விருதும் வழங்கப்பட்டது.

இந்த ஆண்டுக்கான எம்.ஏ.எல்.ஏ. (MALA) விருது, டாடா ஸ்டார்பக்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் மண்டல இயக்குநர் சுதாகர் டோகாரே-வு க்கு வழங்கப்பட்டது. என்கோர் கேப்பிட்டல் குரூப் இன்க். நிறுவனத்தின் இந்திய நிர்வாக இயக்குநர் ஜெய்சன் தாமஸ் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி எர்கோ  நிறுவனத்தின் டிஜிட்டல் அலுவலகத் துறைத் தலைவர் சிபாசிஷ் குஹா ஆகியோர் நடுவர் குழுவின் சிறப்புத் தேர்வு விருதைப் பெற்றனர்.

அவதார் மற்றும் சேராமவுண்ட் நிறுவனங்களின் அனைத்து மதிப்பீட்டு ஆய்வுகளிலும் விருது பெற்ற நிறுவனங்களின் முழுப் பட்டியலைப் பார்வையிட:

https://share.google/3wSDUnAketdBEACGa