மேற்கு வங்காளத்திலும் கால் பதித்தது தவெக..!!
தமிழகத்தின் ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் மேற்கு வங்க மாநிலத்தில் தனது முதல் கட்சி அலுவலகத்தைக் கிழக்கு பர்த்வான் மாவட்டம் பகுபூரில் திறந்துள்ளது. மாநில ஒருங்கிணைப்பாளர் சைத்தாலி ராய், இணை ஒருங்கிணைப்பாளர் சஞ்சய்.டி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஏராளமான இளைஞர்கள் கட்சித் துண்டு அணிந்து கலந்துகொண்டனர். பிற மாவட்டங்களுக்கும் கட்சியை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ள தவெக, இதன் மூலம் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஏற்கனவே, புதுச்சேரியில் கட்சியின் அலுவலகம் செயல்பட்டு வரும் நிலையில், அண்டை மாநிலமான கேரளாவில் தவெக-வின் முதல் அலுவலகம் இந்த (செப்டம்பர்) மாதத்தின் மத்தியில் திறக்கப்பட்டது. பாலக்காடு பகுதியிலேயே அக் கட்சியின் முதல் அலுவலகம் திறக்கப்பட்டு உள்ளது.
இதே போல், நாட்டின் பிற மாநிலங்களிலும் தவெக கட்சி விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆந்திரா, தெலங்கானா மற்றும் வட இந்திய மாநிலங்களில் சிலவற்றிலும் தவெக கட்சி விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்த மாதிரியான சூழலில் தான் மேற்கு வங்கம் மாநிலத்தில் தவெக-வின் முதல் அலுவலகம் நேற்று (செப்டம்பர் 27) திறக்கப்பட்டு உள்ளது. கட்சி அலுவலகம் திறப்பு நிகழ்ச்சியில் மேற்கு வங்க மாநில தவெக ஒருங்கிணைப்பாளர் சைத்தாலி ராய் மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தவெக நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சைத்தாலி ராய், "அரசியல் போராட்டம் அல்லது தேர்தலில் போட்டியிடுவது எங்களுடைய நோக்கம் அல்ல. சமூக சேவையே எங்களது நோக்கம். இதன் மூலமே சாமானிய மக்களை சென்றடைய இருக்கிறோம். இதன் வாயிலாக அமைப்பை விரிவுப்படுத்துவதுடன், சாமானிய மக்களுடன் நேரடித் தொடர்பை ஏற்டுத்திக் கொள்ள முடியும்.
குறிப்பாக, வங்காள மக்களின் இதயங்களை வெல்ல, முதலில் அவர்களின் இன்ப-துன்பங்களில் அவர்களுக்கு துணையாக நிற்பது அவசியம் என நாங்கள் நம்புகிறோம். தற்போது, ஃபாகுபூர் பகுதியில் கட்சி அலுவலகம் திறக்கப்பட்டிருப்பதன் வாயிலாக, இந்த மாவட்டத்தில் தவெக-வின் அமைப்புரீதியான செயல்பாடுகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது" என தெரிவித்தார்.