ஜனநாயகனை லீக் செய்த வெப்சைட்டுகள் முடக்கம்
Apr 12, 2026, 09:09 IST
ஜனநாயகனை லீக் செய்த வெப்சைட்டுகளை முடக்கி தமிழக சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
விஜய்-யின் 'ஜனநாயகன்' திரைப்படம் இன்னும் திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்படவில்லை. இந்த சூழலில் கடந்த (ஏப்ரல் 9) அந்த படத்தின் குறிப்பிட்ட சில நிமிட காட்சிகள் இணையத்தில் கசிந்து, ஒட்டுமொத்த திரையுலகிற்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து முழு படமும் இணையத்தில் வெளியானது.
இந்நிலையில் விஜய்யின் ஜனநாயகன் படம் இணையதளத்தில் லீக்கான விவகாரத்தில் படத்தை பதிவிட்டுள்ள வெப்சைட்டுகள், டெலிகிராம் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளது. படத்தை பகிர்ந்த சமூக வலைதள பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.