☰
×

#BREAKING வேட்டி, சேலைகளுக்கு நெசவுக்கூலி உயர்வு!

 

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதிய ரக வேட்டி, சேலைகளுக்கு நெசவுக்கூலி உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் இலவச வேட்டி - சேலை தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள தவெக அரசும் இந்தத் திட்டத்தை தொடரவுள்ளதாக தற்போது அறிவித்துள்ளது. அதன்படி 2027 பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு புதிய தரத்தில் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படவுள்ளன.

இந்நிலையில் 2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதிய ரக வேட்டி, சேலைகளுக்கு நெசவுக்கூலி உயர்த்தப்பட்டுள்ளது.
பெடல் தறி சேலைக்கு ரூ.125.72, வேட்டிக்கு ரூ.49.99ஆகவும், விசைத்தறி சேலை ரூ.54.81, வேட்டிக்கு ரூ.23.34ஆகவும் நெசவுக்கூலி உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.