×

அடுத்தடுத்து 5 புயல்களா? காட்டுத் தீயாய் பரவும் தகவல் உண்மையா? : வெதர்மேன் விளக்கம்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், கடந்த மாதம் வங்கக்கடலில் நிவர் புயல் உருவானது. இந்த புயலால் கடலோர மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த புயல், வலுவிழந்து கரையைக் கடந்ததால் பெருமளவு சேதங்கள் தவிர்க்கப்பட்டது. இதை தொடர்ந்து, தென் வங்கக்கடலில் புரெவி புயல் உருவானது. இது பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடலிலேயே வலுவிழந்த புரெவி புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஒரே
 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், கடந்த மாதம் வங்கக்கடலில் நிவர் புயல் உருவானது. இந்த புயலால் கடலோர மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த புயல், வலுவிழந்து கரையைக் கடந்ததால் பெருமளவு சேதங்கள் தவிர்க்கப்பட்டது.

இதை தொடர்ந்து, தென் வங்கக்கடலில் புரெவி புயல் உருவானது. இது பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடலிலேயே வலுவிழந்த புரெவி புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஒரே இடத்தில் நீடித்ததால் தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. கடலூர் உள்ளிட்ட இடங்களில் பெய்த தொடர் மழையால் ஆயிரக் கணக்கான ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியதோடு, வீடுகளில் மழை நீர் புகுந்து வெள்ளக் காடாக மாறி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதனிடையே தமிழகத்தில் அடுத்தடுத்து 5 புயல்கள் உருவாகவிருப்பதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது. டிச.8ம் தேதி தொடங்கி ஜனவரி 1 வரை 5 புயல்கள் உருவாகி தமிழகம் புயல் மாநிலமாக மாறும் என தகவல்கள் பரவின. இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளித்த தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், அடுத்தடுத்து 5 புயல்கள் உருவாகவிருப்பதாக பரவும் தகவல் வதந்தி என்றும் அதனை பார்வேர்டு செய்ய வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இது வாட்ஸ் ஆப் பல்கலைக்கழகத்தின் பிற உறுப்பினர்களால் கிளப்பப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.