நாங்கள் ஆதரவு தரோம் ஆனால் ஒரு கண்டிஷன் - காங்கிரஸ் செக்..!
மேலும், சபாநாயகராகவும் ஒருவரை தேர்தெடுக்க வேண்டும் என்பதால், 108-ஆக உள்ள பலம், 106 என்ற எண்ணிக்கையில் குறையும். அப்போது, 12 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே, பேரவையில் தவெக தலைவர் விஜய் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும்.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்களின் ஒருமித்த முடிவின் அடிப்படையில் தவெகவுக்கு ஆதரவு கொடுக்கும் நிலைப்பாடு தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை காங்கிரஸ் வெளியிடும் எனத் தெரிகிறது.மேலும், தமிழ்நாட்டை எந்த வகையிலும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாஜக ஆட்சி செய்யக் கூடாது என்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.
பாஜக மற்றும் அதன் கூட்டணியில் உள்ள கட்சிகளை சேர்க்கக்கூடாது என்ற நிபந்தனையையும் காங்கிரஸ் விதித்திருப்பதாக கூறப்படுகிறது.