×

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற சட்டப்பூர்வமாக போராடுவோம்: அர்ஜுன் சம்பத் அறிக்கை!

 

ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியதாவது:

திருப்பரங்குன்றம் தீபத்துாணில், தீபம் ஏற்றுவது தொடர்பாக, கடந்த தி.மு.க., அரசு கடைப்பிடித்த அணுகுமுறையே தொடரும் என, அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். இது நீதிமன்ற அவமதிப்பாகும். முருக பக்தர்களுக்கு எதிரான, அடக்கு முறையை, கடந்த தி.மு.க., கடைப்பிடித்தது. நீதிமன்ற தீர்ப்புக்கு பின்பும், அங்கு தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை. 

தற்போது, முதல்வர் விஜய் தலைமையிலான, த.வெ.க., ஆட்சியிலும், அதே அணுகுமுறை தொடரும் என, அறிவித்துள்ளனர்.இதன் வாயிலாக, மறைமுகமாக ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியை, த.வெ.க., நடத்துகிறது என, அமைச்சர் நிர்மல் குமார் தெளிவுப்படுத்தி உள்ளார். அமைச்சரது கருத்து, முருக பக்தர்களின் உணர்வுகளை, புண்படுத்தும் வகையில் உள்ளது. இந்த ஆண்டு தீபத்துாணில் தீபம் ஏற்றுவதற்கான அனைத்து நடவடிக்கையையும், சட்டப்பூர்வமான வழியில் பெற, ஜனநாயக முறையில் போராடி வருகிறோம். 

இவ்வாறு அர்ஜுன் சம்பத் கூறினார்.