×

'கிங்டம்' படம் திரையிடுவதில் தலையிட நாம் தமிழர் கட்சியினருக்கு தடைவிதிக்க வேண்டும் - ஐகோர்ட்டில் வழக்கு

 

தமிழகத்தில் விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனமான SSI புரொடொக்சன் வழக்கு தொடர்ந்துள்ளது.

நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த கிங்டம் திரைப்படம்  தெலுங்கு, தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் ஜூலை 31 ம் தேதி வெளியானது.இந்தியாவிலிருந்து இலங்கைக்கு குடிபெயர்ந்து சென்றவர்களை ஈழத்தமிழர்கள் அடிமைகள் போலவும் தீண்ட தகாதவர்களாகவும் நடத்துவது போன்று இத்திரைப்படத்தில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த திரைப்படத்தில் ஈழ தமிழர்களை கொச்சைபடுத்தும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டு இருப்பதாக கூறி நாம் தமிழர் கட்சியினர்  எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் படத்தை திரையிட கூடாது என அவர்கள் வலியுறுத்தி இருந்தனர்.

இந்நிலையில் தமிழகத்தில் விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழீழ பிரச்சனை குறித்த உணர்வுகளை புண்படுத்தும் வகையில் படம் எடுக்கவில்லை, ஆகையால் படம் திரையிடுவதில் தலையிட நாம் தமிழர் கட்சியினருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது,