×

"நாங்கள் தோற்றுவிடவில்லை!" – நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன? பிரதமர் மோடி சூளுரை..!!

 

பிரதமர் மோடி டிவி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

 

பிரதமர் மோடி ஆற்றிய உரை: மகளிர் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற கனவை எதிர்க்கட்சிகள் தகர்த்துள்ளன.பெண்களின் பல ஆண்டு கனவுக்கு முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது.கட்சி நலன் மற்ற எந்த நலனை விடவும் தேச நலன் முக்கியம். மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்படாததற்கு நாட்டு பெண்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி போன்ற கட்சிகளின் சுயநலத்தால் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட முடியாமல் போனது.

 

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தடுத்து நிறுத்தப்பட்டதை எதிர்க்கட்சியினர் கொண்டாடினர். கை தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். கொண்டாடினர். இந்த 21ம் நூற்றாண்டில் நடக்கும் அனைத்தையும பெண்கள் கவனித்து கொண்டு இருக்கிறார்கள். பெண்கள் எல்லாவற்றையும் மன்னிப்பார்கள். தாங்கள் அவமானபடுத்தப்பட்டதை மன்னிக்க மாட்டார்கள். மசோதா தோற்கடிக்கப்பட்டதன் விளைவுகளை திமுக காங்கிரஸ் எதிர்காலத்தில் சந்திக்கும். எதிர்க்கட்சிகளின் செயலை நாட்டு மக்கள் கவனித்து கூர்ந்து கொண்டு உள்ளனர். இந்த மசோதாவை தடுத்த பாவத்திற்கு தண்டனை நிச்சயம் கிடைக்கும்.

மகளிர் இட ஒதுக்கீடு யாரின் உரிமையையும் பறிப்பது கிடையாது. இந்த மசோதா பெண்களுக்கான அதிகாரத்தை அளிக்கும். அடுத்து வரும் தேர்தலிலேயே அதை நிறைவேற்ற நினைத்தோம்.நாட்டின் வளர்ச்சி பயணத்தில் பெண்களையும் அழைத்து செல்ல முயன்றோம். அனைத்து மாநிலங்களிலும் உள்ள பெண்களுக்கு சம உரிமை வழங்கும் நடவடிக்கை. இந்த மிகப்பெரிய முயற்சியை காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் முறியடித்தன.

மத்திய அரசின் பெரிய முயற்சியை எதிர்க்கட்சிகள் கூட்டாக படுகொலை செய்தனர். காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகள் இந்த கொலைக்கு காரணம்.பெண்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் செய்த மிகப்பெரிய சதி இது. ஒன்றன் பின் ஒன்றாக பல பொய்களை பரப்பினர். இதன் மூலம் எதிர்க்கட்சிகளின் உண்மை முகம் வெளியே வந்துள்ளது.காங்கிரஸ் இதுவரை செய்த பாவங்களுக்கு பரிகாரம் தேடவில்லை. வரலாற்று சிறப்பு மக்க மசோதாவை இயற்றும் வாய்ப்பை காங்கிரஸ் இழந்துள்ளது. மாநில கட்சிகளின் தோளில் சவாரி செய்து காங்கிரஸ் இன்னும் உயிர்வாழ்கிறது.

மகளிர் மசோதா குறித்து எதிர்க்கட்சிகள் குறை மட்டுமே சொல்லி வந்தன. எதிர்க்கட்சிகளின் மோசமான அரசியலை நாட்டு மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். மகளிருக்கு அதிகாரம் கிடைத்தால் வாரிசு அரசியல் முடிவுக்கு வரும் என அஞ்சுகின்றனர். நாட்டு மக்களுக்கு சேவை செய்ய பெண்கள் விரும்புகின்றனர். குடும்ப அரசியல் செய்வோரால் மகளிரின் ஆசை நிறைவேறுவது இல்லை. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் இந்த பாவத்தை மக்கள் மறக்க மாட்டார்கள். தொகுதி மறுவரையறை பற்றி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பொய் பேசுகின்றனர்.

தொகுதி மறுசீரமைப்பால் மாநிலங்கள் பாதிக்கப்படும் என வதந்தி பரப்பினர்.அனைத்து மாநிலங்களுக்கும் தொகுதிகள் சமமான வகையில் தான் அதிகரிக்கும். தமிழகம், மேற்கு வங்கம், உபி, கேரளம் என அனைத்து மாநிலங்களும் இதில் பலன் பெறும். தமிழக எம்பி, எம்எல்ஏக்களின் எண்ணிக்கை உயரும் வாய்ப்பை திமுக தவறவிட்டது. திரிணமுல் காங்கிரஸ், சமாஜ்வாதியும் இதே தவறை செய்துவிட்டன. திமுகவின் தவறான முடிவால் தமிழகத்திற்கான வாய்ப்பு பறிபோயுள்ளது.

சீர்திருத்தங்களுக்கு எதிரான கட்சி காங்கிரஸ். எதில் எல்லாம் சீர்திருத்தம் வருகிறதோ அதை எல்லாம் எதிர்ப்பது காங்கிரசின் திட்டம்.ஜன்தன், ஆதார் திட்டங்களை காங்கிரஸ் எதிர்த்தது. டிஜிட்டல் பண பரிவர்த்தனையையும் எதிர்த்தது. காஷ்மீர் சிறப்பு சட்டம் நீக்கம், முத்தலாக் சட்டம் ஆகியவற்றையும் எதிர்த்தது. எஸ்ஐஆர் நடைமுறையை காங்கிரஸ் எதிர்க்கிறது. நக்சலைட்களை ஒழிப்பதில் காங்கிரஸ் தடையாக இருந்தது.காங்கிரஸ் எதிர்மறை வழியில் பயணிப்பதை வரலாறு பதிவு செய்துள்ளது. நம்முடன் சுதந்திரம் பெற்ற பல நாடுகள் நம்மை விட பல மடங்கு முன்னேறிவிட்டன. நாட்டின் முன்னேற்றத்தில் தடை விதித்ததே காங்கிரசின் பிரதான சாதனை. ஒரே ரேங்க் ஒரே பென்சன், ஓபிசி இட ஒதுக்கீடு திட்டத்தையும் எதிர்த்தது. ஒவ்வொரு நலத்திட்டத்தையும் காங்கிரஸ் தொடர்ந்து எதிர்த்துள்ளது.

காங்கிரசுக்கு எதிரான இந்த போர் வெறும் ஒரு சட்ட மசோதாவுக்கு எதிரானது அல்ல. காங்கிரசின் இந்த நடவடிக்கைக்கு நாட்டு மக்கள் சரியானபாடம் புகட்டுவார்கள்.இந்த மசோதா நிறைவேற்றுவதில் எனக்கு எந்த பெருமையும் வேண்டாம். இதற்கான பெருமையை எதிர்க்கட்சிகளுக்கு எழுதி கொடுக்க தயாராக இருந்தேன். இந்த மசோதா நிறைவேறாததில் நாடே துக்கத்தில் உள்ளது. நானும் துக்கம் அடைந்துள்ளேன்.

நாட்டின் 100 சதவீத பெண்களின் ஆசிர்வாதம் எங்கள் பக்கம் உள்ளது. மகளிர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் கட்சிகளின் எண்ணம் ஒரு போதும் நிறைவேறாது. நேற்று எங்களிடம் எம்பிக்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. அதனால், நாங்கள் தோற்றுவிட்டதாக அர்த்தம் இல்லை. மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்ற உறுதியாக உள்ளோம். நாட்டின் வளர்ச்சிக்காக இதை செயல்படுத்தியே தீருவோம். மகளிர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் கட்சிகளின் எண்ணம் நிறைவேறாது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.